Friday, May 30, 2008

எட்ட‌ப்பன்கள் ம‌ன்மோக‌ன் ப‌.சித‌ம்ப‌ர‌ம் ஆட்சியை க‌ட்டிக்காக்கும் புர்ர‌ட்சியாள‌ர்க‌ள்

ஊர் பக்கம் சிலரை குறிக்க 'மழுங்கப்பயல்' என்கிற சொல்லை மக்கள் பயன்படுத்துவார்கள்,அதாவது எவ்வளவு தான் திட்டினாலும் செய்ததையே திரும்பத்திரும்ப‌ செய்து திட்டு வாங்கி வாங்கி அவனுக்கு சுத்தமாக மழுங்கிப்போயிருக்கும்.எந்த ஏச்சும், பேச்சும் அவனுக்கு சுரீர் என்று சுடாது.அதைப்போல தமிழ் நாட்டில் ஒரு மழுங்கப்பய கட்சி இருக்கு,என்னடா இது தமிழ் நாட்டுல அப்படி ஒரே ஒருக்கட்சி தான் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது,ஆமாம் சுத்தமான, நூறு சதவீதம் கலப்படமேயில்லாத‌ மழுங்கப்பய கட்சி தமிழ் நாட்டுல ஒன்னே ஒன்னு தான் இருக்கு. அது தான் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. ஏன் மற்றவனெல்லாம் இல்லையா, எல்லாம் தமிழ் நாட்டில் தானே இருக்கிறாங்க‍ என்று சந்திப்பும் அவரைப்போன்றவர்களும் கேட்க்கக்கூடும்,அவனுங்களும் இருக்கானுங்க ஆனால் அந்த ஓட்டுப்பொறுக்கிக்கெல்லாம் திட்டினால் கொஞ்சமாவது சொரணை வருது, தி.மு.க காரனும்,அ.தி.மு.க காரணும் கொஞ்மாவது கோபப்படுறான், குறைந்தபட்சம் எதையாவது ஒரு பதிலை சொல்றான் ஆனால் எவ்வளவு தான் திட்டினாலும்,கொஞ்சம் கூட சூடும் இல்லாம, சொரணையும் இல்லாம இருக்குற ஒரே ஒட்டுப்பொறுக்கிக்கும்பல் CPM மட்டும் தான்.


க‌ர்நாட‌காவில் ப‌ன்னாட்டு முத‌லாளிக‌ளுக்கு மாமா வேலை பார்க்கும் வாய்ப்பு இந்த முறை பா.ஜ.க பயங்கரவாதிகளுக்கு கிடைத்துவிட்டது, உடனே பொங்கியெழுந்துவிட்ட CPM புழுக்கள் பல ஒன்று கூடி இதைப்பற்றி மத்தியக்குழுவில் விவாதித்து, விலைவாசி உயர்வை பயன்படுத்திக்கொண்டு மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
ச‌ரி, பா.ஜ‌.க இப்போது ஆட்சிக்கு வந்தால் என்ன தான் ஆகிவிடும் ?
ஏன் இந்த புழுக்கள் இப்படி பதறிப்போகின்றன என்று கேட்டால். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும், மதவெறியாட்டம் துவங்கிவிடும் எனவே தன் நாங்கள் பா.ஜ.க வை தலை தூக்கவிடாமல் காங்கிரஸை ஆதரிக்கிறோம் என்கிறார்கள் இந்த போலி கம்யூனிஸ்டுகள்.
இந்த் யோக்கிய‌ர்க‌ளின் ம‌த‌வாத‌ எதிர்ப்பு எவ்வ‌ள‌வு உண்மையானது தெரியுமா? காங்கிரசு தேசபக்த இயக்கம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு உண்மையானது.


பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இவ‌ர்க‌ள் முன் நிறுத்தும் காங்கிர‌ஸின் நான்காண்டு ஆட்சியில் எந்த‌ ம‌த‌வெறியாட்ட‌மும் ந‌டைபெற‌வில்லையா?
வ‌ரிசையாக‌ ஒவொன்றாக அடுக்குமளவிற்கு நடந்துள்ளது,ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக‌, ரத்தக்களரியான ஒரு மதவெறி வ‌ண்முறையை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு கூடுத‌லாக‌வும்,அதன் உச்சத்தையும் தான்டிவிட்ட ஒரு நிகழ்வு நடந்தது. இந்துமதவெறி பயங்கரவாதிகள் என்றுமே தாம் செய்ததை ஒப்புக்கொண்டதே இல்லை.ஆனால் இந்த ஐக்கிய 'முற்போக்கு' கூட்டணியின் ஆட்சியில் ஃபாசிஸம் தன் சொந்த மொழியில் தான் செய்த அணைத்தையும் துனிச்சலோடு பேசியது.

குஜ‌ராத் 2002 இன‌ப்ப‌டுகொலைக‌ளை எப்ப‌டி அர‌ங்கேற்றினோம்,ஒரு குழந்தையை எப்படி பீஸ்,பீஸாக வெட்டியெறிந்தோ‌ம்,க‌வுச‌ர் பானுவின் வ‌யிற்றிலிருந்த சிசுவை எப்படி வெளியே எடுத்து சிதைத்த‌ பின்னர் எரித்தோம்,முசுலிம் பெண்களை எப்படியெல்லாம் கற்பழித்தோம்,இக்ஷான் ஜாஃரியை [காங்கிரசு எம்.பி] எப்படி எரித்துக்கொண்றோம் என்று வ‌ரிசையாக‌ பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ கும்ப‌ல் த‌ன‌து வ‌க்கிர‌ வெறியாட்ட‌ங்க‌ளை குரூர‌மாக‌ விவ‌ரித்த‌தை நாம் அனைவ‌ருமே பார்த்தோம்,ப‌டித்தோம்.

மேற்கூறிய‌ அணைத்தும் பா.ஜ.க ஆட்சியிலா ந‌ட‌ந்த‌து?

பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ரவாதிகளின் இந்த‌‌ வ‌க்கிர‌ வாக்குமூல‌ங்க‌ள் அணைத்தும் பா.ஜ‌.க‌ விற்கு மாற்றாக‌ இந்த‌ போலிக‌ள் முன் நிறுத்திய‌ காங்கிர‌சின் ஆட்சியில் தானே நடந்த‌து? இந்தளவிற்கு துனிச்சலாகவும்,திமிராகவும் இந்த‌ ஃபாஸிஸ்டுகள் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்துக்கொண்டிருந்த போது இந்த‌ ப‌ன்றிகள் என்ன‌ பாராளும‌ன்ற‌ கழிவறையிலா தூங்கிக்கொண்டிருந்தார்கள் ? மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் காம்ரேடுகள் கேள்வி கேட்டு பாராளுமன்ற‌ அவையை ஒரு வழி பன்னியிருக்கலாமே, R.S.S,V.H.P போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நடக்கிறதே வேற என்று வழக்கம் போல‌ உங்க மன்மோகன் மாமா தாடியை பிடித்து தொங்கியிருக்கலாமே ஏன் எதையுமே செய்யவில்லை? மதவெறியர்களின் முகத்தை தெகல்கா இவ்வளவு அப்பட்டமாக கிழித்துக்காட்டிய பிறகும் இன்று வரை அந்த பயங்கரவாத கூட்டத்தின் கொடிய மிருகமான மோடியோ,பாபு பஜ்ரங்கியோ கைது செய்யப்படவில்லை, மாறாக மோடி பாதுகாப்பாக உன்னுடைய ஆட்சி நடக்கும் கேரளாவிற்கே வந்து போகிறான், இது போன்ற ஒரு மிருகம் நம் கண் எதிரில் உயிரோடு நடமாடிக்கொண்டிருப்பதே நமக்கு அவமாண‌மாக,வெட்க்கக்கேடாக இருக்கிறது,ஆனால் இந்த
CPM போலிகள், அந்த பயங்கரவாதிகள் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற அவையிலேயே வெட்கமின்றி,மானமின்றி பல்லை இழித்துக்கொண்டு அவர்களுகளோடு கை குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.மதவாத சக்திகளுக்கு மாற்றாக இந்த போலிக்கம்யூனிஸ்டுகள் தலையில் வைத்து கூத்தாடும் காங்கிரசு அரசு இவ்வளவு நடந்த பிறகும்,ஒரு இன அழிப்பு பயங்கரவாத நடவடிக்கை அப்பட்டமாக‌ நடந்த பிறகும் இந்த மனிதகுல விரோத‌ ஃபாசிஸ பயங்கரவாதிகளுக்கு எதிராக அவர்களுடைய‌ ஒற்றை மயிரை பிடுங்கக்கூடத் துனியவில்லை. நீ முட்டுக்கொடுக்கும் அரசை வைத்துக்கொண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக உன்னால் எதையுமே செய்ய‌ முடியவில்லை என்றால் பிறகு எதை புடுங்குற‌துக்காக‌ காங்கிரசுக்கு புரோக்கர் வேலை பார்த்து தூக்கிப்பிடிச்சிட்ருக்க?
தன்னுடைய கட்சி எம்.பி யையே காப்பாற்ற முடியாத காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் ஆறு வித்தியாசங்களையாவது இந்த போலிக்கம்யூனிஸ்டுகளால் சொல்ல முடியுமா ?
ரொம்பக்கஸ்டம் தான்.

கடைசியாக‌ பார்ப்பன பயங்கரவாத கும்பல் இவ்வாறு சொரணையற்றிருக்கும் போலிகளின் நடு மண்டையிலேயே நச்சென்று ஒரு போடு போட்டுள்ளது,தில்லியிலுள்ள‌ தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது,மத்தியக்கமிட்டி உறுபினர்கள் ஆறு பேருக்கு பலத்த காயம், யெச்சூரியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. சரி அதன் பிற‌காவது சொரணை வந்ததா என்று கேட்டால் அது மட்டும் வரவே இல்லை.


இந்த போலிகள் கூறுவதைப்போல அவன் ஆட்சிக்கு வந்தால் தான் ஆபத்து என்பதே ஒரு பொய்.
இந்துமத‌வெறி பயங்கரவாதிகள் வெறியாட்டம் போட பார்ப்பன‌ பா.ஜ.க ஆட்சி தான் இருக்க‌ வேண்டும் என்பதில்லை,காங்கிரசின் ஆட்சியிலேயே அவர்கள் செய்யவேண்டிய அணைத்தையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரிசா தேவாலையம் தகர்க்கப்பட்டது, தெகல்கா அம்பலப்படுத்தல்கள்,ராமர் பாலம்,போலி கம்யூனிஸ்டுகளின் அலுவலகம் தாக்கப்பட்டது,இந்து மதவெறியர்களே வைத்த குண்டுகள் என்று வரிசையாக பார்ப்பன பயங்கரவாதம் விசமாக பரவிக்கொண்டு தான் இருக்கிறது.காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் அப்படி என்ன தான் வேறுபாடு,ஒரு வேளை போலிக்கம்யூனிஸ்டுகள் சொல்வதைப்போல வேறுபாடுகள் இருக்குமோ? ஆமாம், காங்கிரசு ராம் என்றால், பா.ஜ.க‌ ர்ர்ராம்
ர்ர்ராம் என்கிறான். பா.ஜ.க வெறியன் இரத்தம் பீரிட குடலை உருவினால்,
காங்கிரசுக்காரன் உருவாமலே கதையை முடித்துவிடுகிறான்.மொத்தத்தில் பா.ஜ.க வன்முறையின் களத்தில் நிற்கிறான் காங்கிரசு அவ்வாறு நிற்பதில்லை இது தான் CPMன் அவிந்து போன கண்களுக்கு தெரிந்த மாபெரும் வேறுபாடு போலிருக்கிற‌து. மேலும் CPM பேசும் மதச்சார்பின்மை என்பதும் ஆகக்கடைந்தெடுத்த ஒரு பொய் தான். இந்த போலிகளின் ஆட்சி நடக்கும் மே.வங்கத்திலிருந்து எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியேற்றப்பட்டது இவர்களின் போலி மதச்சார்பின்மைக்கு சமீபத்திய உதாரணம். மதவாத எதிர்ப்பு என்பதும் கூட வெறுமனே புரியாமல் கத்துவது தான்,பொதுவாக மதவாதம், மதவாதம் என்பதே ஒரு பித்தலாட்டம்.அதை தெளிவாக வரையறுத்து "பார்ப்பனியம்" என்று சொல்வதற்கே துடை நடுங்கும் இந்த கோழைகள் தான் அதை வீழ்த்தப்போகிறார்களாம்.
பார்ப்பனியத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் சாதியை பற்றி ஒரு தெளிவு வேண்டும் ஆனால் எண்பது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புரட்சி வந்த பிறகு சாதியெல்லாம் ஒழிந்து விடும் தோழா என்கிற பேச்சை விட்டொழித்துள்ளார்கள் இந்த‌ போலிகள். எனவே இவர்களின் மதவாத எதிர்ப்பு என்பதே ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த ஓட்டுப்பொறுக்கியின் பொய்யை ஒத்தது தான்.

கர்நாடகாவில் பா.ஜ.க பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள் என்றால் பா.ஜ.க‌ நம்ம கட்சி,இந்துகளின் கட்சி என்று நம்பியெல்லாம் மக்கள் வாக்களிக்கவில்லை,மாறாக காங்கிரசு கைக்கூலி கும்பல் நடைமுறைப்ப‌டுத்தும் மறுகாலனியாதிக்க கொள்கைகளின் மீதான வெறுப்பு தான் பா.ஜ.க வை தேர்ந்த்தெடுத்துள்ளது.விலைவாசி உயர்வை பயன்படுத்தி மதவாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று ஊளையிடும் CPM அங்கே ஆட்சியை பிடித்திருக்க வேண்டியது தானே,ஆட்சியை பிடிப்பது கூட இருக்கட்டும்,கேவலம் என்னவென்றால் கர்நாடகாவில் இந்த CPM போலிகள் ஒரே ஒரு சீட்டைக் கூட வெற்றி பெறவில்லை.


பா.ஜ.க கும்பலும் இன்று காங்கிரசு அமல்படுத்திக்கொண்டிருக்கும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகளை தான்
அமல் படுத்திக்கொண்டிருந்தது, கூடவே வக்கிரமாக இந்தியா ஒளிர்கிறது என்றும் சொன்னது அதன் பிறகு நடந்த தேர்தலில் பா.ஜ.க‌ வீட்டிற்கு அனுப்பப்பட்டது.தற்போது கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி வந்துள்ளது காங்கிரசு புறக்கணிக்கப்பட்டுள்ளது, இதை வெறுமனே காங்கிரசு என்று மட்டும் சொல்ல முடியாது, காங்கிரசின் கொள்கைகள் என்றால் அவனுக்கு தோள்கொடுத்து தாங்கி நிற்கும் போலிகளுடையதும் தான். எனவே போலிகளும் தான் ம‌க்களால் புற‌ந்தள்ளப்பட்டுள்ளார்கள்.கர்நாடகாவில் காங்கிரசின் நிலமை இதுவென்றால் மே.வங்கத்தின் உள்ளாட்சி தேர்தலில் இந்த‌ CPM போலிகள் படு தோல்வியடைந்துள்ளார்கள்.இந்த அரசியல் நிலைமைகளின் மாற்றம் ஏதோ விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்பட்டதைப்போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.எனவே விலைவாசி உயர்வை பயன்படுத்தி தான் பா.ஜ.க‌ ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் சொல்லித்திரிறார்கள்.
ஆனால் உண்மை அது மட்டுமா? அது மட்டுமல்ல மக்களை மரணக்குழிக்குள் தள்ளும் தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகள் தான் இந்த ஆட்சி மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணம்.விலைவாசி உயர்வு தான் காரணம் என்றால் கூட அது CPMக்கு தெரியாமல் மன்மோகன்சிங் வீட்டுக்கொல்லைப்புற வழியாகவா கொண்டுவரப்பட்டது,
CPM முட்டுக்கொடுக்கும் இந்த‌ ஆட்சியில் விலைவாசி உயர்கிறது என்றால் அதற்கு இந்த போலிக்கம்யூனிஸ்டுகளும் தான் காரணம்.

இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வந்த மே.வங்கத்தில் ஏன் தோழா தோல்வியடைந்தீர்கள்? கர்நாடகாவில் பா.ஜ.க ஏன் வெற்றி பெற்றது? இவை இரண்டும் தொடர்பற்ற இரண்டு விசயங்களா?
நீங்கள் 'முற்போக்காக' கூட்டணி வைத்துள்ள மாமா கும்பலோடு சேர்ந்து அமல்படுத்தி வரும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தின் விளைவு இப்படித்தான் இருக்கும். நாட்டைக்காட்டிகொடுக்கிற‌ இந்த அரசியலில் அப்பப்ப நடுவில் வந்து கோமாளி மாதிரி, நாங்க அதை எதிர்க்கிறோம், இதை எதிர்க்கிறோம்,வெளியே போயிருவோம்னு வாய்ச்சவடால் வேற.
அதான் வெத்தலப்பொட்டிக்காரன் மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு கிளம்புடான்னு சொல்லிட்டான்ல்ல அப்புறமும் ஏன் சொரணையே இல்லாம அவன் குண்டிக்கு பின்னாடி போய் நிக்கிற
.
மானம்னு ஒன்னு இருந்தா மாமா சிதம்பரம் உலகச்சந்தையில இந்தியாவ கூறு ரெண்டு ரூவாய்ன்னு விக்கிறப்பவே வெளியேறியிருக்கனும்.இன்னமும் ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துக்கிட்டு,புலி வருது புலி வருதுன்னு ஊர ஏமாத்துர கதையை இன்னும் எத்தனை நாளைக்கு தான் சொல்றன்னு நாங்களும் பார்க்கிறோம்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கான அணைத்து காரணங்களும் இந்த‌ போலிக்க‌ம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகத் தெரியும்,தெரிந்தும் தமது தவறுகளை மூடி வைக்கப்பார்க்கிறார்கள் அதை மறைக்க மேலும் மேலும் பல பொய்களை சொல்லி ஆளும் கும்பலின் அடிவருடிகளாகி மக்களின் துன்பங்களுக்கு காரணமாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு இவர்கள் மறைக்க முடியாது என்பதை நாளுக்கு நாள் அம்பலப்படுத்திவரும் நிலைமகள் பருண்மையாக‌ உணர்த்தினாலும் அது இவர்களுக்கு உரைக்காததால் தான் இவர்களை மழுங்கைகள் என்கிறோம்.


ஒரு பத்து வருடங்களை மனதில் ஓட்டிப்பாருங்கள்.

விவசாயம் செய்ததாலேயே ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போய் விட்டார்கள்.தாக்குப்பிடித்து நிற்கும் விவசாயிகளின் விளை நிலங்கள் அணைத்தும் பிடுங்கப்பட்டு நாளும் நகரங்களுக்கு கூலிகளாக விரட்டப்படுகிறார்கள், நம்முடைய‌டைய‌ 80கோடி உழைக்கும் மக்கள் அன்றாடம் அரை வயிற்றோடு உறங்குகிறார்கள், பல பொதுத்துறை நிறுவணங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளிகள் வீதிகளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்,
40கோடிக்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் நிரந்தர‌ வேலை இல்லாமல் அலைகிறார்கள் ,பல லட்சம் இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில்
[ஐ.டி மேன்மக்கள் அல்ல] மனிதத்தன்மையற்ற முறையில் உழைப்பு உறிஞச‌ப்பட்டு சக்கையாக்கப்படுகிறார்கள், கோடிக்கணக்கான நம்முடைய‌ சகோதரிகள் திருமணம் செய்வதற்காகவே அடிமைகளாக உழைத்து தேய்கிறார்கள்,இந்திய கோதுமை விவசாயிகள் டன் கணக்கில் உற்பத்தி செய்தும் அரசு கொள்முதல் செய்யாத‌தால் போண்டியாகிறார்கள்,கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாக இருந்த‌ சிறுதொழில்களுக்கு தாராளமயம் மொத்தமாக சமாதி கட்டிவிட்டது,லட்சக்கணக்கில் நடைபாதை வண்டிக்கடைகள் நகரங்களிலிருந்து குப்பையைப்போல தூக்கி எறியப்படுகின்றன
ஆனால் இன்னொரு பக்கம் அம்பானி என்கிற அட்டைப்பூச்சி 8000 கோடி ரூபாயில் மும்பையில் ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டிருக்கிறான்!


கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு எந்த நாயால் இந்த நிலைமைகள் உருவானது?
அம்பானி என்கிற பணக்கொழுப்பெடுத்த நாய் 8000கோடிக்கு வீடு கட்டுகிறது என்றால் அது எப்படி வந்த பணம்,யாருடைய பணம்? இதெல்லாம் ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்று துரோகியாகிவிட்ட‌ இந்த CPMக்கு தெரியாதா? நன்றாகத் தெரியும்,
இந்த மக்களின் இத்தனை துண்பங்களுக்கும் இந்த போலிக்கம்யூனிஸ்டு துரோகிகள் துணை நின்றிறுக்கிறார்கள்,தற்போதும் மக்களை மரணக்ககுழிக்குள் தள்ளும் ஏகாதிபத்தியக்கைகூலிகளின் மறுகாலனியாக்கக்கொள்கைகளுக்கு துணை நிற்கிறார்கள்.

எதிரிகளை தனிமைப்படுத்தி அம்பலப்படுத்தலாம், மக்களை உணர்வூட்டி அரசியல் படுத்தலாம்,இது போன்ற நிழல் (virtuals ) பிம்பங்களை
என்ன செய்வது?
சிவப்பு நிறத்தில் ஒளியும் துரோகத்தை குழி தோண்டி தான் புதைக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் இவற்றையெல்லாம் தன்னுடைய விதி என்று மனம் வெந்து வெதும்பிப் புலம்புவார்கள்,ஆனால் புரட்சியாளர்கள் அந்த மக்களை அதே நிலையில் விட்டுவைக்கமாட்டார்கள். அவர்களின் துணை கொண்டே துரோகத்தை புதைப்பார்கள்.

இறுதி மூச்சை இழுத்துக்கொள் துரோகமே
உன் படபடப்பில் அழிந்து போ,
அறண்டு கண்ணீர் விடு,
கண்களையும், காதையும் பொத்திக்கொள்
இனி நீ கானும் காட்சிகள் உவப்பாயிருக்காது
வார்த்தைகளே கொன்று விடும்,
தலைதெறிக்க‌ ஓடு, ஒடிப்போய் விழு உனக்கான குழியில்!

Saturday, May 17, 2008

MAY DAY, CELEBRATION OR STRUGGLE ?



May Day as Labour Day

In many countries including India, May Day is also celebrated as Labour Day. The day originates with the US labour movement in the late 19th century. The history of the movement dates back to May 1, 1886. On this day several labour unions across the US went on strike, demanding a standard workday of eight hours. On May 4th there was bloodshed in Chicago's Haymarket Square – A bomb thrown by a revolutionist led to the deaths of a dozen people (including several police officers) and the injury of over 100 people. The protests did not get an immediate outcome, but they proved effective subsequently, as eight-hour work days became the norm in many countries across the globe. This day was hence chosen as a day for demonstrations, parades, and speeches. It is a major state holiday in US, Russia and other communist countries. In India, May Day has also been declared a public holiday.

IN INDIA THE FIRST LABOR DAY

The first May Day celebration in India was organised in Madras by the Labour Kisan Party of Hindustan on May 1, 1923. This was also the first time the red flag was used in India. The party leader Singaravelu made arrangements to celebrate May Day in two places in 1923. One meeting was held at the beach opposite to the Madras High Court; the other meeting was held at the Triplicane beach. The Hindu newspaper, published from Madras reported, The Labour Kisan party has introduced May Day celebrations in Chennai. Comrade Singaravelar presided over the meeting. A resolution was passed stating that the government should declare May Day as a holiday. It was emphasized that workers of the world must unite to achieve independence. May Day is a nationwide bank holiday in India. The holiday is tied to labour movements for communist and socialist political parties. In Maharashtra and Gujarat, respectively, it is officially called Maharashtra Day and Gujarat Day, since it was on this day in 1960 that each attained statehood, after the division of the old Bombay State on linguistic lines.

PICTURES OF MAY DAY RALLYS 2008








CELEBRATION OR STRUGGLE ?

Labor Day is celebrated on May 1 in many countries around the world and it is still often a day for protests and rallies. On this day, various labour organizations across the country carry out processions and organize competitions for children belonging to labour class.
However, in recent years, the celebration of this day has taken a new turn, Now a days under the globalization stage in the world, the MAY day is not been held as a celebrating function. It becomes a struggle day and it becomes a day for the labors to fight for their right once again as “8 hours of work, 8 hours of rest and 8 hours for sleep”. It is not just an old slogan pronounced by the Chicago labors; it will be a breath for all labors until this foolish capitalism and its goliath globalization will left off from the human history.

The globalization which makes thousands of humans, corers of labors into machines for a single profit hungered capital. The base of the human is his work, the human beings become a cultured man for a society because of his work, and this is an ever green practical truth. But today we are becoming a part of machines and we are tortured to run away from the work, not only the thing work, the man is entirely deviating from the basic human activities, and his rest time is fulfilled by the bars, disco, peps etc… of this ‘devil capitalism’.

Every labors man, woman, child except the upper class are affected by the globalization by any one of its way it may be by natural disaster, poverty, jobless, physically or mentally. But the root of these evils is globalization and the seed for this ‘globalization’ is ‘rotten capitalism’.

These days’ labors and working peoples are divided into so many parts by language, race, culture, food etc… but we have a common enemy called capitalist, capitalism, we have no choice for living without destroying the above. We are the creators of this world and we are the center axis for the society’s life span. We are the humans, who don’t have anything to lose except our life, our breath. And we have to get a thing called freedom, it will never provided by this vulnerable capitalist, we have to plug the freedom under the communist labor unions and our policy to form our world ‘socialism, a communism’. “World proletariats unite”.

Friday, May 9, 2008

ஏகாதிபத்தியத்தின் வக்கிரமும்: வாலாட்டும் அடிமை வல்லரசும்

'அதிகமா சோறு திங்காதடா வீட்டுல தரித்திரம் பிடித்தாட்டும்' என்று நம் தாய்மார்கள் சொல்வதுண்டு. ஆனால் அடுப்பே எரியாத வீட்டைப் பார்த்து ஏண்டா அதிகமாக திங்கிறிங்க என்று எவனாவது கேட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். இதைத்தான் வேறு வகையில் கொடுங்கோன்மையின் மொத்த உருவமாக இருக்கும் புஷ் என்கிற ஓநாய் நம்மை பார்த்து ஊளையிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகமாக உண்கிறார்கள் அதனால் தான் இன்று விலைவாசி உயர்வும் , உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளான்.
இதை கேட்கும் அரை வயிற்றுடன் தூங்குபவனும், உணவுக்காக தனது வருமானத்தில் முழுமையாக ஒதுக்கும் எவனுக்கும் சுரீரென்று கோபம் வரும்.

உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக(?) நாடான இந்தியாவின் பதில்தான் என்ன? மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் எந்த ஓட்டுப்பொறுக்கிக்கும் கோபம் வரவில்லை. மன்மோகன்சிங்குக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை, எனவே இதற்கு கருத்து கூறவும் மறுத்துவிட்டார். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளிடம் வேலை செய்பவனுக்கு இருக்கக்கூடிய மனப்பான்மையில் திருவாளர் மானங்கெட்டசிங்கின் உதவியாளர் மாண்புமிகு சியாம்சரண், உடனே "இல்லை..,இல்லை , இந்தியா பொருளாதார வளர்ச்சியடைந்து அதனால் 35 கோடி நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் சத்தான உணவையே வாங்கி உண்கிறார்கள். எனவே தான் புஷ் இப்படி கூறுகிறார்" என்று நியாயப்படுத்துகிறார். இதில் இந்தியா வளர்கிறது என அவர் கூறும் கூற்று முற்றிலும் பொய்யான கேவலமான கருத்து.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் விதர்பாவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலைதான் இந்திய பொருளதாரத்தின் வளர்ச்சியா? இந்தியாவில் 80கோடிக்கும் அதிகமான மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் கீழே என்று அரசே புள்ளி விவரம் அளிக்கிறதே. இது தான் இந்தியா வல்லரசாகும் லட்சணமா?
80 கோடி மக்களின் வருமானம் ரூ.20 -க்கும் கீழே என்ற புள்ளி விவரம் அரசு தந்ததுதான். ஆனால் அதே அரசின் பிரதிநிதி தான் 35 கோடி நடுத்தர வர்க்க மக்கள் சத்தான உணவை உண்கிறார்கள் என்கிறான். எப்படி தான் கூறிய கருத்தில் தானே முரண்படுகிறான் என்பதிலிருந்து இந்தியா வளர்ச்சியடைகிறது வாஷிங்டன் ஆகிறது என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான பிரச்சாரம் என்பது புலனாகிறது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தான் வாழும் நாட்டில் விவசாயம் செய்ததற்காகவே தற்கொலை செய்து கொள்ளும் மானக்கேடு வேறு எங்கேயும் நடந்ததில்லை. நம் நாட்டில் தான் அதுவும் ஒன்று, இரண்டு என்று விரல் விட்டு என்னும் அளவில் இல்லாமல் சுமார் 1.5 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் இதே நாட்டில் தான் அம்பானி என்கிற அட்டைப்பூச்சி சுமார் 8000 கோடி ரூபாயில் தன் குடும்பத்திற்காக மட்டுமே வீட்டையல்ல ஒரு நகரத்தையே கட்டிக்கொண்டிறிருக்கிறான்.

இந்திய ஓட்டுப்பொறுக்கிகளுக்கும், அரசு எச்சங்களும் இந்த 8000 கோடியும், நான்கு வழிச்சாலையும், பளிங்கு பங்களாக்களும், பல வண்ண கார்களும் வளர்ச்சியாகவும் 80 கோடி மக்களின் பஞ்சை பராரி நிலை தாராளமய, உலகமய திருவிழாவிற்கு அவர்கள் தர வேண்டிய பலிகடாவாகவும் தெரியும் பொழுது இவர்களிடம் நாம் எதை எதிர் பார்க்க முடியும், அடிமைத்தனத்தை தவிர. மக்களை ஆட்டிப்படைக்கும் இந்த கொள்ளை கூட்டத்திற்கு பெயர் அரசியல்வாதிகள் "மக்களுக்கான அரசியல் என்றுமே மான உணர்ச்சியில் இருந்து மட்டுமே பிறக்க முடியும்" , "பிரிட்டிஷார் எங்களை ஆண்ட பொழுது எங்களுக்கு செய்த நன்மைகள்" என்ற தலைப்பில் அவன் காலடியில் நின்று துதிபாடிய மன்மோகன் சிங் போன்ற பிணங்களிடம் நாம் சூட்டையும், சொரனையையும் எதிர்பார்க்க முடியாது.

இந்த உணவு பற்றாக்குறைக்கு காரணம் தான் என்ன ?

(1) விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்ப்ட்டு வருகிறது. விவசாயிகள் கூலித்தொழிலாளிகளாக நகரங்களை நோக்கி துரத்தப்படுகின்றனர். விவசாய மானியம் குறைக்கப்பட்டும், அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டும் உள்ளது இதனால் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசிடம் கடன் கிடைக்காமல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து நட்டமடைந்து கடன் தொகையும், வட்டியையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

(2) மேலும் உலகின் வல்லரசு நாடுகள் தங்களுடைய கார்களுக்கான எரிபொருளில் பெரும் பகுதியை உயிரி எரிபொருள் (Bio fuel) மூலமே பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதனால் விவசாயிகள் அனைவரும் உயிரி எரிபொருள் தயாரிக்க ஏதுவான சோளம், காட்டாமனக்கு போன்றவற்றை பயிரிட நிர்பந்திக்கிறார்கள். ஒரு காரின் டேங்கை ஒருமுறை நிரப்ப ஒரு ஆப்பிரிக்கரின் ஓராண்டு முழுவதுக்குமான உணவுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க புஷ் வக்கிரமாக நமது நாட்டைப் பார்த்து குற்றம் சாட்டியுள்ளான்.உலக மக்களின் முதல் எதிரியான இந்த முட்டாளுக்கு அரசியல் அறிவோ, ஏன் பொது அறிவோ கூட கிடையாது. அவனுடைய அமெரிக்காவில் தான் வாகனங்களுக்கு உணவுப்பொருட்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதை எல்லா மக்களும் காறி உமிழ்கிறார்களே என்ற அறிவு கூட இல்லாமல் துப்பியதை துடைத்துக்கொண்டு இந்தியர்கள் அதிகமாக உண்கிறார்கள் என்கிறான்.
பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் அடிவாங்கிய இந்த ஏகாதிபத்திய அமெரிக்க நாய் இன்று ஈராக் மக்களிடம் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்காவை எதிர்த்து அந்த மானமுள்ள மக்கள் நடத்தும் எதிர்தாக்குதலால் பீதியடைந்துள்ள அமெரிக்காஆளும் வர்க்க பிரதி நிதிகள் அதை மறைக்க இந்தியாவும் சீனாவும் தான் அதிகம் பெட்ரோல் டீசலை பயன் படுத்துகிறார்கள் எனவே தான் எண்ணைத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது என்கிறது. இப்படிபட்ட சாக்கடைப்புழுக்களை மூன்று வேளையும் துதிபாடி அவன் இடும் கட்டளைகளை வேதமாக நிறைவேற்றும் அடியாள்படையான காங்கிரஸ் கட்சி இது குறித்து அப்பட்டமாக ஆதரித்தது ஒன்றும் வியப்பானது அல்ல ,ஆனால் இந்து,இந்து இராஜ்ஜியம்,இந்து தேசியம்,பாரத் மாதா கி ஜெய் என்று எந்நேரமும் பஜனை பாடிக்கொண்டிருக்கும் பா.ஜ.க என்ன சொன்னது ? மன்மோகன் சிங் இதை கண்டிக்க வேண்டும் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டது. ஏய் இதுல உன்னோட கருத்து என்ன அதைச் சொல்லுடா என்று கேட்டால், பா.ஜ.க என்கிற இந்த அடிமை நாயும் ஒன்றும் சொல்லவில்லை, ஏனெனில் பா.ஜ.க வின் உலகமய பகவான்,ராமபிரானின் சர்வதேச அவதாரம் புஷ் தான் என்பதை பா.ஜ.க பயங்கரவாத கும்பலின் ஆட்சியை அறிந்தவர்கள் நன்றாக புரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக நமது ஜால்ராக்கள்(வலதுசாரி நுழைவு வாயிலில் நிற்கும் இடதுசாரிகள்) என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் " நாங்கள் கண்டிக்கிறோம்" என்று வழக்கம் போல சொல்கிறார்கள். போர்குணமிக்க(!)இடதுசாரிகளிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது. நாமம் போட்டும்,வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்டைப்பஞ்சாயத்து சங்கங்களை வைத்திருக்கும் இந்த போலிகள் கண்டித்ததே பெரிய விசயம் தானே. தொழிலாளிகளின் போர்க்குணத்தை மழுங்கடிக்கும் இவர்களா அமெரிக்காவிற்கு எதிராக போராடுவார்கள் ?


ஓட்டுப்பொறுக்கிகள் அணைவரின் நிலையும் ஒன்றே தான்.ஆளும் கட்சியாக இருந்தால் மவுனமாக இருப்பதும் எதிர் கட்சியாக இருந்தால் கொஞ்சம் போல மட்டும் உதார் காட்டுவது அதுவும் அமெரிக்க எஜமானுக்கு எதிராக அல்ல, தனது சீட்டில் உட்கார்ந்திருக்கும் சக ஓட்டுப்பொறுக்கி ஆளுவதை சகிக்க முடியாமல் திட்டுவது,அறிக்கை விடுவது அதில் கூட தவறியும் கூட எஜமானை புன்படுத்தும் சொற்கள் தவறியும் கூட பிரயோகிக்கப்படாமல் பார்த்து வெற்று அறிக்கைகள் விடுவதோடு முடித்துக்கொள்வார்கள். இந்த ஓட்டுப்பொறுக்கிகள் தங்களுடைய அமெரிக்க ஆண்டானின் ஏவல்களுக்கு வாலாட்ட மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.தனது ஆண்டையின் மனது எந்த வகையிலும் புன்படாமல் பார்த்துக்கொள்வதே இவர்களின் தலையாய கடமையாக உள்ளது.எனவே தான் எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி பயலும் இந்த நாடும்,மக்களும் இந்த அளவிற்கு இழிவுபடுத்தப்பட்ட பிறகும் கூட எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அடுத்த தேர்தலில் எப்படி ஒட்டைப்பொறுக்கித்திங்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். வாயைத்திறந்தாலே கருணாநிதியை கரித்துக்கொட்டும் ஜெயலலிதா எங்கே போனாள் ? ஏன் இதைப்பற்றி பேசவில்லை, அறிக்கைவிடவில்லை?
மூச்சுக்கு முன்னூறு முறை கண்டதற்கும் அறிக்கை விடும்,உடம்பெல்லாம் தேசபக்தி என்கிற திரவம் சுரக்க,சுரக்க பாக்கிஸ்தானை வெறிகொண்டு திட்டித்தீர்க்கும் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் எங்கே போனான் ? ஏன் இதற்கெதிராக போராடவில்லை ?


புஷ் குடும்பத்தில் சம்பந்தம் கிடைத்தால் வெட்கமின்றி அதையும் செய்துகொண்டு தனது குடும்பம் சர்வதேச சமத்துவக்குடும்பம் என்று அதற்கு விளக்கமும் அளிப்பார் கருணாநிதி. இந்த சதைப்பிண்டங்கள் இந்த நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் பேசாது,இவர்களின் குறி அடுத்த ஆட்சி, விஜயகாந்த் என்கிற அடி முட்டாளுக்கு உடனடியாக முதல்வர் பதவியில் உட்கார வேண்டும் அதற்கு இது உதவுமா,அதற்கு ஏதாவது செய்ய வேண்டும்,அதற்காக அறிக்கை விடலாம் மற்றபடி இந்த அறிவாளியை பொருத்தவரை இதெல்லாம் முக்கியத்துவமற்ற பிரச்சனை.மக்களின் வாக்குகளை பொறுக்கிக்கொண்டு, மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள்,மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் என்கிற இந்த கூட்டத்திற்கு இந்த நாட்டின் ஏழைகள்,பஞ்சைப்பராரிகள்,விவசாயிகளும்,தொழிலாளிகளுமான அணைத்து உழைக்கும் மக்களும் மிகச்சரியான ஒரு தீர்ப்பை விரைவில் அளிப்பார்கள் அந்த தீர்ப்பு வரும் நாளும் தொலைவில் இல்லை.