Thursday, August 19, 2010

கிழட்டு புண்ணாக்கு யாவாரியும், சில ரசிக எருமை மாடுகளும்!!

இந்த பதிவில் சூப்பரு டூப்பர் மற்றும் அவனது ரசிக கொட்டை தாங்கிகளின் டவுசர் கிழிக்கும் பதிவுகள் தொகுக்கப்படும். கரண்டு கம்பத்தை கண்டால் காலைத் தூக்கும் சொரனையற்ற சொறிநாய்களைப் போல எந்திரனுக்கு கூஜா தூக்கி எழுதுகிறார்கள் ரசிக குஞ்சுகளாம் இந்தப் பதிவர்கள். அவர்களுக்கு ரஜினியைச் சொன்னால் சூடு சொரனையெல்லாம் ஞாபகத்து வருகின்றது, நாட்டிலுள்ள பிற பிரச்சினைகள், தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குக் கூட அவர்கள் கோபங் கொண்டது போல தெரியவில்லை. இவர்களே சொல்லிக் கொள்வது போல இவர்கள் எல்லாம் 'தோலர்கள்' அதாவது தோலில்லாத ஜடங்கள், சூடு சொரனை மானம் மாரியாதை அனைத்தும் ரஜினியின் தோலுக்கு கீழே ஒளித்து வைத்துள்ள மாக்கள்.


முதல் பதிவாக நாஞ்சில் எக்ஸ்பிரஸ் என்ற பதிவருடையது. அவருக்கு நன்றிகள்:
அன்னிக்கு ஒரு மும்பாய் வாலா தோஸ்த் ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது திடீர்னு சொன்னான் "சிவாஜின்னு ஒரு ரஜினி நடிச்ச படத்தை இந்தி டப்பிங்ல பார்த்தேன், நீ அந்தப்படத்தை பார்த்திருக்கியான்னு" கேட்டான். பின்ன தமிழ்நாட்டுல கோவிலுக்கு போகாமாகூட இருந்திடலாம் ஆனா புதுசா வர்ற ரஜினி படத்துக்கு போகலைன்னா சாமி குத்தமாயிடும்டா நான் பார்த்துட்டேன், படம் எப்படி இருந்துச்சுன்னு கேட்டேன்.

படம் முழுக்க நல்ல காமெடியா இருந்துச்சுன்னான். "ஆமான்டா அதுல விவேக்னு காமடி நடிகர் வர்ற சீன்லாம் காமெடியா இருக்கும்னேன்," இல்லடா ரஜினி வர்ற எல்லா சீனிமே காமெடியா இருந்துச்சுடான்னான்... அதுல குறிப்பா கடைசி பைட்டுல சிரிச்சு சிரிச்சு முடிலன்னான்.

அதைகேட்டடதும் என் ரத்தம் கொதித்தது, ரட்சகன் படத்துல நாகர்சுனுக்கு நரம்பு புடைப்பது மாதிரி எனக்கும் துடிச்சுது. டாய்....எங்க தெய்வத்தோட சூப்பர் ஹிட் படத்தை காமெடிப் படம்னா சொல்லுறன்னு அப்படியே பீச்சாங்கையால ஒரு அப்பு அப்பனும்னு தோனுச்சு. பின்ன ஒட்டுமொத்த தமிழர்களின் கடவுளை யாராவது கிண்டல் பண்ணா சும்மா இருக்க முடியுமா... என் இடத்துல நீங்க இருந்தா என்னப்பண்ணுவீங்க. ஒரு தமிழனா என்னால இது பொறுத்துக்கவே முடியாது...

காவிரி தண்ணியை வாங்கமுடியாத கையாலாகாத பத்தி தமிழனை கிண்டல் பண்ணிருந்தா கம்முன்னு இருந்திருப்பேன், முல்லைப்பெரியாறு பிரச்சனைல வேலைக்காத மாண்புமிகு தமிழக அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணிருந்தாலும் கம்முன்னு இருந்திருப்பேன் ஆனா
அவன் சொன்னது யாரை எங்க குலதெய்வத்தை... விட்ருவனா...? அவன்கிட்ட சொன்னேன்
"டேய்....ரொம்ப சிரிக்காதடா இன்னொரு காமெடி படம் வரப்போவுது அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சக்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்"...யார்கிட்ட... நான் சரியாத்தானே பேசிகிட்டிருக்கேன்...


தலைப்புக்கும், பதிவுக்கும் என்னடா சம்பந்தம்னு கேட்ககூடாது.... டைமிங்காகவும், ரைமிங்காவும் இருந்துச்சேன் வச்சுட்டேன்....தலைவா ரொம்ப நேரமா தம்மை பத்த வைக்காமகீறீயே நான் வேணா தீக்குளிக்கட்டுமா தலைவா......


பித்தர்கள் தெளிவடைய...:


கடவுளும், காரியக் கிறுக்கனும்!திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- Iரஜினி பாபாவும் பக்தகேடிகளும் - ஒரு நேருக்குநேர் !குசேலன் உள்குத்து : சும்மா அதிருதில்ல !!ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?ரஜினி பிம்பமும் உண்மையும்ரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா?தன்மானமும் ரஜினி ரசிகனும்!"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!" - ரஜினியின் கபட நாடகங்கள்ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

Wednesday, April 21, 2010

சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட மொழியைச் சேர்ந்தவை - அஸ்கோ பார்போலா

சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளன. மேலும், அவை எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதும் கடும் விவாதத்தை அவ்வப்போது கிளப்பவே செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். இந்து பாசிச அரசியலுக்குப் பொருத்தமாக சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம், அதன் எழுத்துக்கள் ஆரிய மொழி என்ற கதையும் அவ்வப்போது ஆதாரமின்றி பொய்யாகவும், புனைச் சுருட்டுகளாகவும் பரப்பப்படுவது வாடிக்கையே. ஆயினும், பல துறை சார்ந்த அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழியியல், தொல்பொருளியல், மானுடவியல் அடிப்படையில் வலியுறுத்தியே வந்துள்ளனர். இப்பொழுது பின்லாந்தைச் சேர்ந்த டாக்டர் அஸ்கோ பார்போலா சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் எழுத்துக்களில் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர், சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட மொழி என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவர் சம்ஸ்கிருத வேத ஆய்வாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அவரது ஆய்வுகள் www.harappa.comல் உள்ளன. அவரது ஆங்கிலப் பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.

Deciphering the Indus script: challenges and some headway

சூரியன்

Tuesday, March 2, 2010

ஆர் எஸ் எஸ் அங்கிளும், காம லீலை நித்தியாவும்!!

சுவாமி நித்தியானந்தா நடிகைகளுடன் காம லீலைகளில் ஈடுபட்டு ஆன்மீகச் சேவை செய்தது வீடியோ ஆதாரங்களாக நேற்று வெளிவந்து சந்தையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.எப்போது ஆதாரம் வெளி வரும் என்று காத்திருந்தது போல ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நித்தியாவின் ஆசிரமத்தை தாக்கி, அவனது படங்களை கிழித்து, அவனை கைது செய்ய வேண்டும் என்றும், ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்து மதத்துக்கு பெருத்த அவமானத்தை அவன் உருவாக்கி விட்டான் என்றும், இந்துக்களிடம் தான் குற்றமற்றவன் என்று நிரூபித்த பின்புதான் அவன் வெளியே நடமாட வேண்டும் என்றும் கூறி குரங்குகள் போல குதிக்கின்றனர்.

சாமியார்கள் கபட வேடாதாரிகள் என்பது காலம் காலமாக அம்பலமாகி வருவதும், இவையெல்லாவற்றையும் மீறி நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பல்வேறு மன உளைச்சல்களிலிருந்தும், மன நோய்களிலிருந்தும் விடுபட உதவுவதாக எண்ணிக் கொண்டு மக்கள் இந்த போதை வஸ்து வியாபாரிகளை நோக்கி படை எடுப்பதும் நடந்து வருகின்ற ஒன்றுதான். அந்த வகையில் நித்தியா அம்பலமானது அவனது ரசிக மஹாஜனங்களிடம் அல்லது ஆன்மீக கஸ்டமர்களிடம் ஏற்படுத்த இருக்கும் ஆன்மீக அதிர்ச்சி ஒரு நல்ல விளைவை நோக்கிய இன்னுமொரு சிறிய முன்னேற்றம் என்று நாம் சந்தோசப்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க. இவனைப் போல நமது சாமியார் இன்னும் அம்பலமாகவில்லை என்று சத்குரு ஜக்கி போன்றவர்களின் ஆன்மிக கஸ்டமர்கள் நிம்மதியில் இருப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், அவனை வைத்து ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் நாடகம் அவர்களின் பார்ப்பனிய பாசிச தத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதற்கு முன்பு இதைவிட கேவலமான முறையில் சங்கராச்சாரி என்ற கஞ்சா காமகோடி பீடையாதிபதி, கொலை, ஆள்கடத்தல், புளூபிலிம், விபச்சாரம், பெண்களை பலாத்காரம் செய்தல், முறைக் கேடான உறவுகள் என்று சகலவிதமான அசிங்கங்களிலும் சிக்கி அம்பலமானான். அன்றைக்கு அவனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி கோசமிட்டவர்கள் இதே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான். இதற்காக சென்னை நீதிமன்றத்தில் ம க இ க அமைப்பினரிடம் அடி வாங்கி ஓடியவர்கள்தான் அவர்கள். சங்கராச்சாரி என்ற பார்ப்பனன் காம லீலைகளின் ஈடுபட்டால் அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையாம். அவன் குற்றமற்றவன் என்று நீருபிக்க வேண்டிய அவசியமில்லையாம். அவன் மீண்டும் அனைத்துலக குருவாக வலம் வர வேண்டுமாம். அவ்வாறு செய்யாவிடில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமானதாம், அவமானப்படுத்துவதாகிவிடுமாம். ஆனால் நித்தியாவின் விசயத்தில் தலைகீழ். ஏனேனில் அவன் பார்ப்பான் கிடையாது.இதுதான் இந்துக்களின் நம்பிக்கை, ஆன்மீகம் என்று ஆர் எஸ் எஸ் பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துகிறது.

நமக்கு இந்த பேதமெல்லாம் கிடையாது. எவனொருவன் பார்ப்பனியத்துக்கு சேவை செய்கிறானோ எவனொருவன் மக்கள் விரோதியோ அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது அனுகுமுறை.ஆனால், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளோ, தேவநாதன் என்ற பார்ப்பனன் கோயிலுக்கு வருகின்ற பெண்களை மயக்கி கோயில் கருவறையிலேயே ஜெகஜ்ஜால காம லீலைகள் அரங்கேற்றியது அம்பலமான பொழுது அதனை இந்துத்துவ பயங்கரவாதிகள் கண்டுகொள்ளவே இல்லை. சிதம்பரம் கோயிலில் ஆண்டாண்டு காலமாக விபச்சாரமும், கொலைகளும், திருட்டும் கோயில் தீட்சிதர்களாலேயே அரங்கேறி வந்தது பலமுறை அம்பலமான பொழுதெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகள் அமைதி காத்தார்கள்.ஆனால், தமிழில் பாட உரிமை கோரி போராடிய பொழுது மட்டுமே எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள்.

ஆக, விபச்சாரமும், பாலியல் வக்கிரங்களும், திருட்டும், கொலையும் பார்ப்பனனுக்கு மட்டுமே உரியது என்ற இந்து மதச் ஆசாரங்களின்படிதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். எனவேதான் சூத்திர சாமியார்கள் இதே வேலைகளைச் செய்தால் மட்டுமே இந்து மதத்துக்கு அவமானம் என்று கதறுகிறார்கள். சூத்திர சாமியார் ஆகட்டும் அல்லது பார்ப்பனச் சாமியார் ஆகட்டும் அல்லது இவர்களுக்கு இடையே பேதம் பார்த்து அரசியல் செய்யும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளாக அணி திரண்டுள்ள சூத்திர, பார்ப்பன அடியாட்களாகட்டும் இவர்கள் அனைவருமே ஒழித்துக் கட்டப் பட வேண்டிய கிருமிகள். இவர்களை வீதிகளின் இறங்கி நையப் புடைத்தெடுக்க சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டியுள்ளது.

சூரியன்

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!">பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!">புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !">சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !