Wednesday, April 21, 2010

சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட மொழியைச் சேர்ந்தவை - அஸ்கோ பார்போலா

சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளன. மேலும், அவை எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதும் கடும் விவாதத்தை அவ்வப்போது கிளப்பவே செய்கின்றன. ஆர்.எஸ்.எஸ். இந்து பாசிச அரசியலுக்குப் பொருத்தமாக சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம், அதன் எழுத்துக்கள் ஆரிய மொழி என்ற கதையும் அவ்வப்போது ஆதாரமின்றி பொய்யாகவும், புனைச் சுருட்டுகளாகவும் பரப்பப்படுவது வாடிக்கையே. ஆயினும், பல துறை சார்ந்த அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழியியல், தொல்பொருளியல், மானுடவியல் அடிப்படையில் வலியுறுத்தியே வந்துள்ளனர். இப்பொழுது பின்லாந்தைச் சேர்ந்த டாக்டர் அஸ்கோ பார்போலா சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் எழுத்துக்களில் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர், சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட மொழி என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவர் சம்ஸ்கிருத வேத ஆய்வாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிந்துசமவெளி நாகரிகம் குறித்த அவரது ஆய்வுகள் www.harappa.comல் உள்ளன. அவரது ஆங்கிலப் பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.

Deciphering the Indus script: challenges and some headway

சூரியன்

No comments: