Wednesday, June 18, 2008

உண்மைத்தோழர்களே நீங்கள் டாடாயிஸ்டா கம்யூனிஸ்டா ?

ஞானேந்திரா புரட்சி செய்வான் என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு தூய‌ உண்மை CPM கட்சி புரட்சி செய்யும் என்பதும்.இருந்தும் ஏன் இன்னும் மக்கள் நலனையும்,புரட்சியையும் நேசிக்கும் உண்மையான தோழர்கள் அதிலிருந்து வெளியேறாமலிருக்கிறார்கள்? ஒருவேளை CPM என்றைக்காவது புரட்சி செய்யும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களா? இருக்கலாம்.ஆனால் வெளியிலிருக்கிற யாரும் அப்படி நம்பவில்லை. குறிப்பாக CPM மோடு சாக்கடையில் புரண்டெளும் எந்த ஒட்டுப்பொறுக்கியும் அப்படி நம்பவே இல்லை.ஒருவன் தன்னைப்பற்றி தானே கொண்டுள்ள அகரீதியான மதிப்பீடுகள் சரியானவை அல்ல மாறாக புற நிலை மதிப்பீடுகள் தான் துல்லியமானவை. தான் புரட்சி செய்யப்போவதாக எந்த கட்சி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்,ஆனால் அந்த கட்சி குறித்து எதிரி என்ன மதிப்பீடு வைத்துள்ளான் என்பது தான் முக்கியமானது. அந்த வகையில் எந்த எதிரிகளாலும் அவனுடைய ஆபத்தான எதிரியாக கருதப்படாத‌,அவ்வளவு ஏன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத கட்சியாகத்தான் CPM உள்ளது.அதாவது எதிரிகளுடைய மதிப்பீட்டின் படி CPM ஒரு கோமாளிக் கட்சி மட்டுமே. இவையெல்லாம் அந்த கட்சியிலிருக்கும் உண்மையான‌ தோழர்களுக்கு தெரியாதா? உணர்வுப்பூர்வமான தோழர்கள் ஏன் இன்னும் அதில் இருக்கிறார்கள்?
CPM புரட்சி செய்யும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களா?
இருக்கலாம். ஒரு வேளை அந்த நம்பிக்கையில் கூட‌ அவர்கள் இருக்கலாம்.அதற்கான நியாயமும் கூட உள்ளது! CPM தனது அணிகளுக்கு புரட்சி என்றால் என்னவென்றே சொல்லித்தருவதில்லை.மார்க்சிய கோட்பாடுகள் குறித்து எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. தனது அணிகளை CPM இவ்வாறு வைத்திருப்பது தற்செயலானது அல்ல அவர்களை மார்க்சிய கண்ணோட்டமற்ற செக்கு மாடுகளாக‌ திட்டமிட்டே தான் வளர்க்கிறார்கள். திரிபுவாதம் அதன் துவக்கப்புள்ளியில் மட்டும் தான் அறியாத பிழையாக‌ கருக்கொள்கிறது, அதன் பிறகு அது உணர்வுப்பூர்வமான தன்மைக்கு பரிணமித்து எதிர் நிலையில் பயணிக்கிறது. CPMன் திரிபுவாதம் என்பது முழுக்க முழுக்க
உணர்வுப்பூர்வமானதாக மாறிவிட்டது. எனவே தான் தனது அணிகளை திட்டமிட்டே குருடர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறோம்.

CPMன் சாரம் என்பது மக்களையும்,அணிகளையும் புரட்சிகர தன்மையிலிருந்து சமரச தன்மைக்கு இட்டுச்செல்லும் கம்யூனிச‌ மூடு திரையிட்ட‌ ஆளும் வர்க்க சேவையாகும்.
ஒரே வரியில் சொல்வதெனில் போர்குன‌மிக்கவர்களை காயடிப்பதாகும். ஒரு க‌ம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருக்கு விமர்சனங்களை இப்படி இப்படியெல்லாம் அனுக வேண்டும் என்று வெளியிலிருந்து யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.ஏனெனில் விமர்சனம்-சுயவிமர்சனம் என்கிற முறை கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டும் தான் உண்மையோடும்,உயிர்ப்போடும் உள்ளது. CPM தனது அணிகளுக்கு விமர்சன-சுயவிமர்சன முறையை க‌ற்றுத்தருவதில்லை எனவே தான் அந்த தோழர்களும் ஏன் நீங்க எப்ப பார்த்தாலும் எங்களையே திட்டுறீங்க என்கிறார்கள்.அவ்வளவு ஏன் புதியகலாச்சாரம்,புதியஜனநாயகம் இதழ்களை படிக்கக்கூடாது என்று தனது அணிகளை தடுப்பது என்ன முறை? விமர்சன-சுயவிமர்சன முறையா? பாசிஸ்ட் தத்துவத்தை வைத்திருக்கும் RSS காரன் கூட அனைத்தையும் படிக்கிறான்.ந‌மது இதழ்களையும் தொடர்ச்சியாக படிக்கிறான் புக,புஜ படிப்பதால் அவனுக்கு எந்த பயமும் இல்லை.
CPM க்கு மட்டும் ஏன் பயம்? தனது கூடாரம் காலியாகிவிடும் என்கிற பயம் தான் அது. அந்த பயம் தான் தனதுஅணிகளுக்கு விமர்சன-சுயவிமர்சன முறையை க‌ற்றுத்தராமல் தடுத்து வைத்திருக்கிறது.
அந்த பயத்திலிருந்து தான் அதை படிக்க வேண்டாம் இதை படிக்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.
CPM குறித்த விமர்சனங்களை நாம் மட்டும் வைப்பதில்லை பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கோணங்களிலிருந்து அவற்றை முன் வைக்கிறார்கள்.ஆனால் நாம் மட்டும் தான் தொடர்ச்சியாகவும்,ஆழமாகவும் விமர்சிக்கிறோம். நமது விமர்சனத்தின் ஆழம் தான் அதன் மொழி நடையை கடுமையாக்குகிறது.எனவே விமர்சனங்களை அந்த தோழர்கள் CPM மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாகவும்,CPM ஐ திட்டுவதாகவும் பார்க்காமல் விமர்சனத்தின் உட்பொருளை, உண்மைத்தன்மையை பார்க்க வேண்டும்.அதன் நியாயத்தையும், அது சரியானதா என்பதையுமே பார்க்க வேண்டும். விமர்சனங்களை அவ்வாறு பாராபட்சமற்ற முறையில் பார்க்கும் பட்சத்தில் விமர்சணத்தின் நேர்மையையும்,நியாயத்தையும் உணரமுடியும்.சரியானதை வந்தடைய முடியும். இவ்வாறு அவர்கள் முன்முடிவுகளற்ற முறையில் சரியானதை தாமே முன் வந்து அறிந்து கொள்ளாதவரை, புரட்சியை அதன் செறிவான பொருளில் அறிந்துகொள்ளும் வரை CPM என்கிற‌ இருட்டறையிலிருந்து வெளியேற இயலாது. தனது அணிகள் மேற்கூறியவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமலிருப்பதைத்தான் CPM விரும்புகிறது.அதில் தான் CPMன் நலனும் அடங்கியிருக்கிறது.அந்த தோழர்கள் புரட்சி,பாட்டாளி வர்க்கம்,கட்சி பற்றியெல்லாம் மேலும் விரிவாகவும்,உண்மையான பொருளிலும் அறிந்து கொள்ளும் தருணங்களில் CPM தன் அந்திமக்காலத்தை நெருங்கும் .
அந்த தருணம் விரைவில் வரும்.அப்போது இது செத்து அடங்கும்.


தேடுறான்,தேடுறான் புர‌ட்சி
இன்னும் கைக்கு சிக்க‌வில்லை..


க‌டலில் மூழ்கி முத்தெடுப்பதைப்போல பாராளுமன்றம் என்கிற‌ சாக்கடையின் முடை நாற்றத்தை எப்படியாவது பொறுத்துக்கொண்டு,முக்கித்தின‌றி மூக்கைப்பொத்திக்கொண்டாவது மூழ்கி அதிலிருந்து எப்படியாவது புரட்சியை கண்டுபிடித்துவிட CPM கடந்த அரை நூற்றாண்டுக்குகளுக்கும் மேல் கடுமையாக‌ முயற்சித்துவருகிறது.எனவே அவ்வாறான ஒரு புரட்சியை சாதிக்க வெள்ளைக்காரன் பெற்றெடுத்த‌ கைக்கூலி கட்சியான‌ காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் சோத‌ணைக்கும், வேதணைக்கும் ஆட்பட்டுள்ளது. CPM முதுகில் தூக்கிச்சுமக்கும் இந்த காங்கிரசு தலைமையிலான அரசு தான் தற்போதைய நம்முடைய அணைத்து பிரச்சனைகளுக்கும் காரண‌மான‌
‘தனியார்மய,தாராளமய,உலகமய’ கொள்கைகளை நடைமுறைப்படுத்தி ஏகாதிபத்திய நாய்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது. இந்த‌ கொள்கைகள் தான் நம் மண்ணின் மைந்தர்களை, ந‌மக்கு உணவளித்த விவசாயிகளையும், ந‌ம் மானம் காத்த நெசவாளிகளையும், ந‌ம் மலத்தை அள்ளினால் தான் உணவு என்று வாழும் துப்புரவுத் தொழிலாளிகளையும் நாளும் பச்சைப்படுகொலை செய்துவ‌ருகிறது. இந்த 'ம‌றுகால‌னியாதிக்க‌ கொள்கைகள்'
CPM ன் தயவால் இன்னும் கோடிக்க‌ண‌க்கான‌ உயிர்க‌ளை காவு வாங்க‌‌வும் காத்திருக்கிற‌து.

மக்களுக்கெதிரான‌ காங்கிரசின் அத்தனை துரோகங்களுக்கும் துணை போகும் CPM இன்னொரு பக்கம் தானும் இவற்றையெல்லாம் எதிர்ப்பதாக கூறுகிறது. நாட்டை காட்டிக்கொடுப்பவனோடு கூட்டு சேர்ந்து கொண்டு நானும் நாட்டுப்பற்றுள்ளவன் தான் என்று கூற CPM க்கு எவ்வளவு
துனிச்சலிருக்க‌ வேண்டும் ? இவர்கள் காங்கிரசோடு சேர்ந்துகொண்டு நாட்டைக்கூறு போடும் கொள்கைகளுக்கு துணை போவதை இந்த நாடே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இருந்தும் அது பற்றி கொஞ்சம் கூட வெட்கமே படாமல் நானும் இதையெல்லாம் எதிர்க்கிறேன் என்று சொல்ல இவர்களுக்கு எவ்வளவு துனிச்சலிருக்க‌ வேண்டும்? எந்த தைரியத்திலிருந்து இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் இவையெல்லாம் எவ்வளவு பச்சை பொய்கள் என்பதையும் CPM ல் உள்ள தோழர்கள் தான் யோசித்து பார்க்கவேண்டும். தனியார்மய,தாராளமய‌ கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரசு தலை என்றால் காம்ரேடுகள் தான் வால்.வாலை பின்னங்கால்களுக்கிடையில் சுருட்டிக்கொண்டால் அது இல்லவே இல்லை என்றாகிவிடுமா.வாலாக இருந்து நாசகார கொள்கைகளை மே.வங்கத்தில் நிலைநாட்ட முயன்று நாறிப்போனதை இந்த நாடே பார்த்தது.அங்கே தன் வாழ்வாதாரங்களை காப்பாற்றிக்கொள்ள போராடி இவர்களால் கொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு பதில் கூறாமல் இவர்கள் தப்பி விட முடியுமா? இது போன்ற எத்தனை எத்தனை துரோகங்கள் அத்தனைக்கும் இந்த துரோகிகள் உழைக்கும் மக்கள் உருவாக்கும் தீர்ப்பு மேடையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். CPMன் துரோகத்தனங்களை அறியாமல் இந்த துரோகிகள் பின்னால் செல்லும் தோழர்களே…
துரோகிகளோடு சேர்ந்து இந்த‌ அவப்பெயரை நீங்களும் சுமக்க நேரிடும்… சிந்தியுங்கள் தோழர்களே.

நாம் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் இவர்கள் இதுவரை பதில் கூறியதில்லை,இனியும் கூறுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.மாறாக‌ வ‌கைவ‌கையான‌ முத்திரைக‌ளைத்தான் குத்துவார்க‌ள்.அருந்ததிராயையும்,மேதாபட்கரையுமே கூசாமல் மாவோயிஸ்டுகள் என்று கூறிய யோக்கியர்கள்,அதையே உண்மை என்று தமது அணிகளையும் ந‌ம்பவைத்தவர்கள் நம்மையெல்லாம் சர்வதேச பயங்ரவாதி புக்ஷ்சின் கூட்டாளி என்று தான் கூறுவார்கள். இவ‌ர்களை கம்யூனிஸ்டுகள் என்றும்,அதை கம்யூனிஸ்டு கட்சி என்றும் நம்பிச் செல்லும் தோழர்கள் தான் அவர்களின் நேர்மையற்ற செயல்களையும்,பொறுப்பற்ற பதில்களையும் கூர்ந்து நோக்கி அவையெல்லாம் எவ்வளவு வழவழ கொழகொழ மழுப்பல்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். CPM பற்றி ஒரு முடிவிற்கும் வரவேண்டும்.வெளியிலிருந்து கேட்கப்படும் அணைத்து கேள்விகளுக்கும் நேர்மையாக பதில் கூறுமாறு கட்சியை வலியுறுத்த‌‌ வேண்டும்.


டாட்டா எனக்கு கூட்டாளி
பாட்டாளிக்கு பகையாளி
'டாடாவுக்கும்,எனக்கும் உள்ள‌ நட்பை முறிக்க முடியாது,அவரை என்னால் வெளியே போகச்சொல்ல முடியாது'
என்று கூறினாரே புத்ததேவ் பட்டாச்சார்யா அந்தகொலைகார தரகு முதலாளி டாடாவுக்கும் இந்த 'பாட்டாளிவர்க்கத் தலைவன்' பட்டார்ச்சார்யாவிற்கும்‌
இடையிலான‌ ந‌ட்பு 'துளிர்க்கவே' நந்திகிராமத்தில் இத்தனை உயிர்கள் பறிக்கப்ப‌டவேண்டியிருந்தது என்றால் அந்த கேவலம் உறுதிப்படவேண்டும் என்றால் நிலைமை என்னவாகும்? இப்பவே புத்ததேவுக்கு பார்ப்பன‌ பயங்கரவாதி அத்வானி ஃப்ரெண்டு.அப்புறம் என்ன குஜராத்தில் ஒரு விசித்திர விலங்கு இருக்கிறதே அதுவும் ஃப்ரெண்டாகி விடும். பிறகு நட்பை நன்றாக 'உரமிட்டு' வளர்ப்பார்கள்.

மே.வங்கத்தில் நண்பன் டாடாவிற்காக இவர்கள் போராடியது கொஞ்சமா நஞ்சமா, உயிரையெடுத்தல்ல‌வா போராடினார்கள் !
தன் வாழ்வாதாரங்களை காத்துக்கொள்வ‌தற்காக, தன் குழந்தையைப்போல் கருதிய விளை நிலங்களை எவ்வாறேனும் இந்த கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றிவிட‌‌ ஒரு தாயைப்போல அந்த எழுதப்படாத காகிதங்களான‌ (கார்க்கி) அப்பாவி விவசாயிகள் என்னென்ன் விதமாகவெல்லாம் போராடினர்கள் ,எத்தனை பினங்கள் விழுந்தது.அணைத்தையும் இந்த நாடே பார்த்ததே.உயிரைக் காத்துக்கொள்ள‌ அவர்கள் நடத்திய‌ போராட்டங்களெல்லாம் என்ன தொழிலாளி வர்க்க கட்சிக்கெதிரான எதிர்புரட்சி வேலைகளா,சதியா? சொல்லுங்கள் தோழர்களே? விவசாயிகளையும்,உழைக்கும் மக்களையும் நேசிக்கும் உங்களுக்கு அவ்வாறு சொல்ல நா எழாது. ஆனால் உங்கள் கட்சி அந்த அப்பாவி விவசாயிகளுக்கு அப்படித்தான் முத்திரை குத்தியது,தனது பயங்கரவாத கொலை முகத்தை ம‌றைத்துக்கொள்ள அவர்களை பயங்கரவாதிகளாக்கியது. அவர்கள் அணைவரும் வெளியிலிருந்து ஊடுருவிய மாவோயிஸ்டுகள், ந‌க்சலைட் பயங்கரவாதிகள் என்று ஊளையிட்டது.ஆனால் அதை அந்த‌ தரகு நாய் டாட்டா கூட நம்பியிருக்க‌மாட்டான்.உண்மையான பாட்டாளி வர்க்கத்தோழனுக்கு விவசாயி தோழன் என்பதும், டாடா தான் பயங்கரவாதி என்பதும் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டிய விசயமல்ல‌.


செய்யிற‌து த‌ர‌குப்ப‌ணி
உன‌க்கெதுக்கு சிவ‌ப்புத்துணி ?

அன்னிய முதலீடு தான் ஏகாதிபத்தியங்கள் வீசும் காலனியாதிக்க‌ வலை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா தோழர்களே? இது ஒரு புதிய காலனிய காலகட்டம் என்பதையும், இவை ஒப்பந்தங்கள் மூலமும்,கடன்க‌ள் மூலமும் மூன்றாம் உலக‌ நாடுகள் மீது தினிக்கப்படுகிறது என்பதையும் முதலாளித்துவ அறிஞர்களே எழுதியும் பேசியும் வரும்போது மார்க்சியத்தை 'கற்ற‌றிந்த' கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரியோ 'அன்னிய முதலீடு தான் வேலைவாய்ப்பை அள்ளித்தரும்' என்கிறார். மார்க்சிய பொருளாதாரத்தின் அடிப்ப‌டியையே மறுக்கும் இந்த உலகமய பொன்மொழிக்கு என்ன வியாக்கியானம் சொல்ல முடியும்? நெம்பர் ஒன் ஏகாதிபத்திய‌ கைக்கூலிகள் அல்லது அடிமை புத்தியுள்ள அடிவருடிகள் மட்டுமே இவற்றுக்கெல்லாம் வியாக்கியானமும்,பொழிப்புரையும் எழுத முடியும். ஆனால் அப்பாவி ஜீவன்களான விவசாயிகளையும்,உழைக்கும் மக்களையும் நேசிக்கும்,அவர்களின் இழிந்த நிலையை மாற்றத்துடிக்கும்‌ தோழர்கள் எப்படி இது போன்ற‌ அம்மனமான,வெட்கங்கெட்ட முதலாளித்துவ சரக்குகளையெல்லாம் சகித்துக்கொண்டு இன்னும் அந்த கட்சியிலிருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

பார்ப்பனிய கீதையில் கண்ணன் கூறுவானே " நானே கொலை செய்தேன்,நானே கொல்லப்பட்டேன்" அதைப்போல‌ புரிந்துகொள்ளலாமா இதையெல்லாம்? இவர்களே நாசகாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதையும்,இன்னொரு பக்கம் அதை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ள‌ தமது அணிகளை உசுப்பேற்றி பந்த்,ஆர்ப்பாட்டம்,மறியல் என்று நடிப்பதையும் வேறு எப்படித்தான் புரிந்துகொள்வது? ஆனால் இந்த திருடன்,போலீஸ் விளையாட்டில் கேலிக்குள்ளாக்கப்படுவதும், முட்டாளாக்கி ஏமாற்றப்படுவதும் ஒன்றுமறியாத பொது மக்களா என்றால் இல்லை,அவர்களெல்லாம் எப்போதோ இவர்களை நம்புவதையெல்லாம் மூடநம்பிக்கை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.மாறாக‌ கட்சிக்காக கொண்றெடுக்கும் வெய்யிலில் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டங்கள்,மறியல்களில் பங்கேற்று போலீஸ் நாய்களிடம் ரத்தம் வர அடி உதைபடும் உணர்வுப்பூர்வமான, கம்யூனிசத்திற்காக‌ உயிரையே சட்டையைப்போல கழற்றி வீச‌க்கூடிய அருமையான‌‌ தோழர்கள் தான் வஞ்சமாக ஏமாற்றப்படுகிறார்கள்.அவர்கள் விழித்தெழுந்து விழி சிவந்தால் சிவப்புக்கலர் கார்களில் பவனி வரும் அண்ணன்கள் உரிய இடத்திற்கு போய் சேருவார்கள்.


கொள்கைகூட்டணி
ஒவ்வொன்னுக்கும்
என்ன பின்னணி?

ஏகாதிபத்திய பூட்ஸ் நக்கிகளான காங்கிரசு கைக்கூலிகளின் கடந்த நாண்காண்டு 'மேற்பார்வையில்' (அதாங்க ஆட்சிக்காலம்) எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்,
எத்தனை நெசவாளிகளின் வீட்டில் இழவு விழுந்தது,எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்பட்டன,எத்தனை சிறு தொழில்கள் ‌அடிஆழத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன, எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளின் அடி வயிறு பற்றி எரிய எரிய பறித்தெடுக்கப்பட்டன,எத்தனை முறை விலைவாசி உயர்ந்தது,வறுமைக்கோடு என்கிற உயிரோடு வறுத்தெடுக்கப்படும் எண்ணெய்ச்சட்டிக்குள் கடந்த‌ நான்காண்டுகளில் எவ்வ‌ளவு என்னிக்கையிலான மக்கள் தள்ளிவிடப்பட்டார்கள்,மொத்தத்தில் கடந்த‌ நான்காண்டுகளில் எத்தணை வீட்டுத் தாலிகள் அ‌றுக்கப்பட்டது,
எத்தனை குடிகள் கெடுக்கப்பட்டது ??
இவை அணைத்தும் லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் நடந்துள்ளது.விவசாயிகளின் தற்கொலைகள் மட்டும் 40.000 ஐ தொட்டுள்ளது.


தோழரே,உங்க கட்சி ஏன் இன்னும் 'புரட்சி' நடத்த‌வில்லை என்கிற கேள்விகளையெல்லாம் நாங்கள் கேட்கவில்லை. இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறோம்.
CPM தலைவர்கள் அதற்கு மட்டும் பதில் கூறட்டும்.

1, பாரளுமன்றத்தில் புரட்சி செய்வதையெல்லாம் பிறகு பார்ப்போம்,குறைந்த பட்சம் மேற்கூறிய மறுகாலனியாதிக்க கொள்கைகளால் நடைபெற்ற‌ கொலைகள் எதையுமே தடுக்கமுடியவில்லையே,இதைக்கூட செய்யமுடியவில்லை என்றால் எதை சாதிக்க அங்கே போனார்கள் உங்கள் தலைவர்கள்?

2 ,பன்றித்தொழுவத்தில் பல ஆண்டுகளாக படுத்து புரண்ட பழைய கதைகளையெல்லாம் விட்டுவிடுவோம்.என்ன நோக்கத்திற்காக பாராளுமன்றத்திற்கு போனீர்கள்? இந்த நாண்காண்டுகளில் மட்டும் பாராளுமண்றத்தில் பங்கேற்றதன் வழி மார்க்சிஸ்ட் கட்சி சாத்தித்தது என்ன?
இத‌ற்கு மட்டும் CPM பதில் சொன்னால் போதும்.

இதில் முக்கியமானது என்னவென்றால் பாராளுமன்றத்திற்கு போனதால் CPM ன் நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ அவர்களின் உதவியோடு ஆட்சியை பிடித்த மன்மோகன் தரகு கம்பெனியின் நோக்கங்கள் நிறைவேறியுள்ளது,தான் செய்ய நினைத்த அனைத்தையும் கைக்கூலிகளின் குருட்டுத் துணிச்சலோடு அச்சமின்றி செய்துவருகிறது அந்த கும்பல்.அவர்களின் நோக்கம் என்னவோ அது நிறைவேறியுள்ளது,மாறாக உங்களின் நோக்கம் என்ன? அந்த‌ இடத்தில் உங்களுக்கு என்ன வேலை? எதை நிறைவேற்றிக்கொள்ள அங்கே போனீர்கள்? அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா? இதற்கெல்லாம் CPM ன் பதில் என்ன? இதுவரை எந்த‌ பதிலும் இல்லை.

தோழர்களே,
இவையெல்லாம் பொதுவாக‌ அனைவருக்கும் எழக்கூடியக் கேள்விகள் தானே? இத‌ற்கு ப‌தில் சொல்ல‌ வேண்டும் தானே மாறாக‌, CPM ஏன் பதில் சொல்ல‌ அஞ்சி பயங்கரவாதிகள் பட்டம் கட்டி திசை திருப்புகிறது.?
இவற்றுக்கெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் பதில் என்ன என்பதை கேளுங்கள்.

இது வெறுமனே பதில் சொல்வதோடு முடிகிற காரியம் இல்லை தோழர்களே.ஒன்றுமறியாத‌ அப்பாவி மக்களின் உயிர் தொடர்பான பிரச்சனை.ஏனெனில் இந்த மன்மோகன்சிங் அரசு எத்தனை லட்சம் மக்களுக்கு புதை குழி வெட்டித் தள்ளி மூடியதோ அத்தணைக்கும் இவர்கள் துணை போயிருக்கிறார்கள்.தரகு வேலை செய்து வருகிறார்கள்.அரசு எவ்வளவு கொடிய‌ கொலைபாதகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினாலும் நாலு நாள் ஆர்ப்பாட்டம்,மறியல் என்று முடித்துக்கொண்டு குளிர்கால கூட்டத்தொடரில் படுத்துக்கொள்ள‌ பன்றிக்கூடார‌த்திற்கு போய்விடுகிறார்கள்.கடந்த நாண்காண்டு ஆட்சியில் மாண்டுபோன,வாழ்விழந்த,பாதிப்பிற்குள்ளான அணைவரின் நிலைக்கும் கரணமான‌ இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கவிழாமல் காப்பாற்றியதன் மூலம் மக்களைக் கொண்றொழிக்க 'உதவி'யவர்கள் என்கிற பாத்திரத்தில் சிற‌ப்பாக பங்கேற்ற,பொதுவாக போலிக்கம்யூனிஸ்டுகள் என்றறியப்படும் மார்ர்க்சிஸ்டுகள் ஏன் இந்த ஆட்சியை காப்பாற்றி வருகிறோம் என்பதற்கும் இவ்வளவு தொகுதி மக்களின் இறப்பிற்கு யார் காரணம் என்பதையும் சரியான,தெளிவான‌ பதிலாக‌ கூற வேண்டும். காங்கிரசும் அதற்கு தரகு வேலை செய்யும் இவர்களும் தான் என்பது மாபெரும் ரகசியமா என்ன? ஆனால் CPM அதை சொன்னால் என்னவாகும்? அந்த நாயி தான் காரணம்னு தெரிஞ்சும் ஏன்டா அவனை ஆதரிச்ச? அப்படின்னா தெரிஞ்சே தான் இத்தனை கோடி மக்களோட வாழ்க்கையை நாசமாக்க அவனுக்கு உதவி செஞ்சியா? அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை இப்படி உடைத்து கூறிவிட்டால் அப்புற‌ம்‌ இப்படி வெங்காய மூட்டையை தூக்குபவரின் மொழியில் தான் கேள்விகேட்டு தெருக்குத் தெரு விசாரணைகள் நடக்கும். இதையெல்லாம் நினைத்தால் பயமாகத்தானே இருக்கும்,எனவே தான் CPM பதிலளிப்பதற்கு,பதிலாக கேள்வி கேட்பவரையே பயங்கரவாதி என்பதோடு வாயை மூடிக்கொள்கிறது.
எனவே CPM ல் உள்ள‌ தோழ‌ர்க‌ள் தான் அதன் கோர‌வாயை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க‌ முயல‌ வேண்டும்.

த‌னியார்ம‌ய‌ம்,தாராள‌ம‌ய‌ம்,உல‌க‌ம‌ய‌ம் என்கிற‌ இந்த‌ நாச‌கார‌ கொள்கைகளை கட்டாயமாக‌ மக்கள் மீது தினிப்பது என்பது அவர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரமான யுத்தமாகும்.
இந்த‌‌‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் கொள்கைகள் நாளும் எத்தனை பச்சைப்படுகொலைகளை செய்துவருகிறது என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள்.

இவ்வளவு நடந்த பிறகு இப்போதாவ‌து ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு வெளியேற வேண்டியது தானே,ஏன் இன்னும் இந்த கொலைகார அரசை நமது கட்சி ஆதரிக்கிறது என்கிற சாதாரண கேள்வி கூடவா உங்களுக்குள் எழவில்லை? மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரசை ஆதரிக்கிறோம் என்கிற பதிலை உண்மை என்கிற மொழிக்கு பெயர்த்தெடுக்கும் பொழுது 'பாசிஸம் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பாசிஸத்தை ஆதரிக்கிறோம்' என்று வந்து விழுகிறது.கைக்கூலிக் காங்கிரசை ஆதரிக்க இது போன்ற ஒரு மொக்கை பதிலை எப்படி இந்த மாக்சிஸ்ட் கட்சியால் கூறமுடிகிறது? கட்சி அப்படிக்கூறினாலும் உங்களால் எப்படித் தோழர்களே இது போன்ற ஒரு பொய்யை ஏற்றுக்கொள்ளமுடிகிறது? பா.ஜ.க வும்,பார்ப்பன ஜெயாவும் சித்தப்பா மக்க,பெரியப்பா மக்க என்கிற அறிவுகூட இல்லாத இவர்கள் தான் அந்த பார்ப்பனப் பேயோடு போய் கூட்டணி வைத்துக்கொண்டார்கள்.அதன் பிறகு அந்த மம்மி உர்ர்.. என்று மூஞ்சைக்காட்டிய‌தும், " ச்சே ச்சே.. அவர் இப்படிப்பட்ட ஒரு மதவாதசக்தி என்பதை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டோம்" என்று ஓடி வந்துவிட்டார்கள். அதே போல‌,பார்ப்பன மலத்தை மட்டுமே பார்த்துப்பார்த்து நக்கும் ஜெயகாந்தன் என்கிற நாய் (CPI க்கும் தான்) பார்ப்பன அடிவருடியாக மாறிய பிறகும் கூட சூடு சொரணையே இல்லாமல் அந்த அசிங்கத்தை மேடையேற்றி மாலை போட்டு வணங்கினார்கள்.கடைசியில் அது சங்கரமடத்தில் போய் சரண‌டைந்து தான் கழிந்த கழிவை இவர்கள் முகத்திலேயே விசிரியடித்தது.அவ்வாறே RSS காரன் ஜெயமோகனை அழைத்தும் கொளரவித்து மேடையேற்றினார்கள். அதற்கு நன்றிக்கடனாக அந்த சைக்கோ 'பின் தொடரும் நிழலின் குரல்' என்கிற செருப்பைக்கழட்டியே அடித்தது, அப்போதுங்கூட அதை பீ என்று உணரவில்லை இந்த தயிர்சாதங்கள்.மாறாக அந்த மலத்தை தமுஎச கந்தர்வன் தான் வெளியிட்டார்.அதற்கும் பிறகு வழக்கம் போல‌ தாமதமாகத்தான் காம்ரேடுகளுக்கு ஜெயமோகன் RSS பயங்கரவாதி எண்பது புரிந்தது,அதுவும் தானாக அறிந்துகொண்டதல்ல வெளியிலிருந்து ஜெயமோகனை பிறர் அம்பலப்படுத்திய‌தால் சுதாரித்துக்கொண்டவர்கள் உடனே ‘ஜெயமோகனை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்’ என்றார்கள். 'அவருடைய ஆசை வார்த்தைகளில் மயங்கி விட்டோம் ஆனால் இப்போது விழித்துக்கொண்டோம்' என்று இதே வார்த்தைகளில் அப்படியே எழுதினார் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற‌ மொக்கைச்சாமி . இதெல்லாம் எப்படிப்பட்ட பதில்கள் தோழர்களே?அப்படியானால் மன்மோகன் சிங் நேரடியாக புக்ஷ் காலை நக்கும் போது தான் அது ஒரு அடிமை விலங்கு என்பதையும் நம்புவார்களா ? அப்போது தான் ஆதரவையும் வாபஸ் வாங்குவார்களா? அப்போதுங் கூட இதே போல ஆதரவை மட்டும் வாபஸ் வாங்கிவிட்டு தன்னுடைய அத்தனை தவறுகளையும் மறைத்துக்கொண்டு 'மன்மோகன் இப்படியெல்லாம் செய்வார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை,அவரை நம்பி ஏமாந்துவிட்டோம்'
என்று முடித்துக்கொள்வார்கள். இவர்கள் ஏமாறுவது இருக்க‌ட்டும்.இவர்கள் பெரிய ஏமாளிகள் என்பதை நாம் நம்பிவிடுவோம்.ஆனால் இவ‌ர்க‌ளை ந‌ம்பி ஏமாந்த லட்ச‌க்கணக்கான தோழர்களுக்கு என்ன பதில்?
கட்சி சொன்னதால் ஜெயமோகனை ஆதரவு சக்தி என்று நம்பிய தோழர்களுக்கு என்ன‌ பதில் சொல்வார்கள்?
கேள்வி கேட்ப‌வ‌னை ப‌ய‌ங்க‌ர‌வாதி என்று சொல்வார்க‌ள்!

இவன் கூட கூட்டணி வைக்கலாம், அவன் கூட கூட்டணி வைக்கலாம், இவனை நம்பலாம் அவன நம்பலாம்ன்னு ஒவ்வொருத்தன் பின்னாடியும் போறதுக்கு ஒனக்கு ஏதாவது தத்துவம் இருக்காப்பாங்கிறது தான் கேட்க வர்ற கேள்வி. அதுக்கு எதாவது பதிலிருக்கா?
தற்போது ஆதரித்துக்கொண்டிருக்கும் கொள்ளைகும்பல் ஊரை கூறு ரெண்டு ரூவாய்ன்னு விக்கிறானே அவனை எந்தள‌வுக்கு நம்பி ஆதரிக்கிறார்கள்? அதாவது ஜெயலலிதாவை நம்பிய‌ அளவுக்கா,ஜெயமோகனை நம்பிய‌ அளவுக்கா?
என்ன‌ நம்பிக்கையில் அந்த‌ கைக்கூலிகள் ஆட்சி செய்ய அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள்? இதற்கெல்லாம் ஏதாவது பதிலிருக்கிறதா CPM டம் ?

கேவலம், பச்சையாக பார்ப்பன விசத்தை கக்கும் ஒரு எழுத்தாளனையே மதிப்பிட லாயக்கற்றவர்கள் இந்த நாட்டை எப்படி மதிப்பிட முடியும்? நாட்டை காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளிடமிருந்து மக்களை எப்படி காக்க முடியும்?

அனைத்து கேள்விகளையும் இனி CPM தோழர்கள் தான்‌ கேட்க வேண்டும்.ஏனென்றால் ஒன்று.வெளியிலிருந்து கேள்வி கேட்கும் நாமெல்லாம் பயங்கரவாதிகள். இன்னொன்று. அவ‌ர்க‌ள் தான் அந்த‌ கட்சி சொல்வ‌தையெல்லாம் ந‌ம்புகிறார்க‌ள்.அதை ந‌ம்பி பின்னாலும் செல்கிறார்க‌ள்.இது வெறும‌னே ந‌ம்பினோம் ஆத‌ரித்தோம் என்று முடித்துக்கொள்கிற‌ பிரச்சணை அல்ல தோழ‌ர்களே, ஏனெனில் நாளை எல்லாம் நடந்து முடிந்த பிறகு,கட்சி சொன்னதால் தான் நம்பினோம்,கட்சியை நம்பினதால் தான் கட்சி முட்டு கொடுத்த கட்சியையும் நம்பினோம் என்று ப‌தில் கூற‌ முடியாது,கூறவும் கூடாது. எனவே CPM காங்கிர‌சை தாங்கிப்பிடிக்கிற‌து என்றால்,முட்டுக்கொடுக்கிறது என்றால் அதன் பொருள் அந்த கட்சியின் தோழர்களாகிய நீங்கள் காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் என்பது தான். கோடிக்கணக்கான மக்களை மரணக்குழிக்குள் தள்ளத்துடிக்கும் நாசகார‌ கொள்கைகளை அமல்படுத்தி வரும் காங்கிரசை CPM ஆதரிக்கிறது என்றால் எந்த நம்பிக்கையில், என்ன‌ துனிவில் ஆதரிக்கிறது? பதில் மிகவும் சுலபமானது.
உங்கள் கட்சியை நீங்கள் நம்புகிறீர்கள்,
உங்கள் சார்பாக CPM காங்கிரசை நம்புகிறது எனவே ஆதரிக்கிறது.
ஆக‌மொத்தத்தில் CPM செய்து வரும் அனைத்து தவறுகளுக்குமான பொறுப்பு உங்கள் தலையில் வ‌ந்து விடிய‌‌ப்போகிற‌து. இது ஒரு எச்ச‌ரிக்கை தோழ‌ர்க‌ளே!

CPM ஆதரவில் ஆட்சி நடத்தும் காங்கிரசு அமல்ப‌டுத்திவரும் 'மறுகலனியாதிக்க' கொள்கைகளின் விளைவாக லட்சக்கணக்கான தற்கொலைகள்,விவ‌சாய‌த்துறை திட்ட‌மிட்டு அழிக்க‌ப்ப‌டுகிற‌து,கோடிக்கணக்கான மக்கள் நாளும் கொடிய பசி பஞ்சத்தால் வாடுகிறார்கள்,பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிளும் கொழுத்துத்திரிகிறார்கள்,சிறு தொழில்கள் மொத்தம் மொத்தமாக கொன்று புதைக்கப்படுகிறது, பொதுத்துறைகள் அடிமாட்டு விலைக்கு ஏலம் விடப்படுகின்றன,மக்களின் உயிரோடு வணிகச்சூதாடிகள் விளையாட்டு நடத்துகிறார்கள்,விலைவாசி நடுத்தரவர்க்கத்தையே வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளி விடுகிறது,மொத்ததில் நாடும் CPM ஆதரவோடு சுடுகாடாகி வருகிறது.இந்த மறுகாலனியாக்க படுகொலையில் இவர்களுடைய பங்கு தான் முக்கியமானது,அதாவது இதை ஒரு சினிமாவோடு ஒப்பிட்டால் இவர்கள் தான் டைரக்டர். ஏனென்றால் இவர்கள் தானே காங்கிரசை அப்படியே ஆட்டிப்படைப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.
அதை நினைத்து இவர்களுக்கு வெட்கங்கெட்ட சந்தோசம் வேற‌.



பாராளுமன்ற ஊளை முட்டை
குஞ்சி பொறிக்குமா?
CPM விழுந்து விழுந்து கும்பிடு போடும் பாரளுமன்ற புரட்சிக்கு ஆப்படிக்கும் ஒரு விசயமும் இருக்கு தோழர்களே,கேட்டுட்டு ஓடிப்போயி உடனே 'இதெல்லாம் உண்மையா தோழான்னு' கட்சியில கேட்டுறாதீங்க‌ அப்புறம் உங்களையும் 'நக்சலைட்'ன்னு முத்திரை குத்தி வெளியே அனுப்பிடுவாங்க. ஒன்ன மட்டும் புரிஞ்சிக்கங்க உங்கள் கட்சியிடம் கேள்விகளை நேராடியாக‌ கேட்டு பதிலைப் பெறவே முடியாது.கேள்வி கேட்காமலே தான் பதிலைப் பெற முயற்சிக்க‌ வேண்டும், அதாவது அவர்களின் பல்வேறு மழுப்பல்கள், வாக்குமூலங்கள், அறிக்கைகள், ந‌டவடிக்கைகளிலிருந்து தான் அவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த‌ ஓட்டுப்பொறுக்கிகளின் தலைமைத்திருக்கோவிலான‌ பாராளுமன்றத்தின் குடுமி யார் கையில் இருக்கிறது தெரியுமா தோழர்களே?
நம் குடியை கெடுக்கும் அமெரிக்கா கையில் தான் இருக்கு! நம்மூர் பாப்பான் எப்படி நம்மள‌ ஒரு லிமிட்டுக்கு மேல கோவிலுக்குள்ள விடமாட்டேங்கிறானோ அதே போல அமெரிக்கா தலைமையிலான W.T.O , WORLD BANK, I.M.F ஐ மீறி அங்கே எதையும் செய்ய முடியாது.அவனுடைய‌ கட்டுப்பாட்டில் தான் இந்த பன்றித்தொழுவம் பராமரிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ஒன்று பா.சி போடுகிறாரே பட்ஜெட் அதை என்ன பிரகாக்ஷ் காரத்திடமும்,யெச்சூரியிடமும் காட்டிய‌ பிறகா பாராளுமன்றத்தில் அறிவிக்கிறார்? இல்லையே.
பிறகு யாரிடம் காட்டுகிறார்? வேறு யாரிடம் I.M.F யிடம் தான்! பட்ஜெட்டை‌ பார்த்து அவன் குட் மார்க் போட்டு OKன்னு சொன்ன பிறகு தான் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டும் நாட்டுக்கே அறிவிக்கப்படுகிறது.பாராளுமன்றத்தில் அணைத்தும் அவனுடைய ஆனைப்படி தான் நடக்கிறது.

W.B, W.T.O வை மீறி அங்கே எந்த பன்னியும் எதுவும் செய்ய முடியாது. ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக அங்கே நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் தான் நல்ல‌ உதாரணம்.தூக்கிவீசிட்டானுங்க வீசி. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா 1994 லேயே நடந்துவிட்டது.2000 பக்கங்களை கொண்ட காட் ஒப்பந்தம் என்கிற அடிமைச்சாசனத்தின் ஒருவரியை கூட படிக்காமல் அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளும் அதன் அணைத்து அம்சங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே மனதாக நிறைவேற்றினார்களே அப்போது எங்கே போனார்கள் இந்த‌ புரட்சியாளர்கள்? அன்றைக்கே ஏன் இவர்களால் அந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை? அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அனைத்து பிரச்சணைகளுக்கும் காரணமான‌ காட் ஒப்பந்தம் நிறைவேறும் வரை காரியக்கிறுக்கன் கனக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாட்டை விற்க கைக்கூலிகளோடு துணையும் போய்விட்டு இப்ப‌ வந்து நான் அதை எதிர்க்கிறேன்,இதை எதிர்க்கிறேன் என்றால் கேக்கிறவனெலாம் கேனைப்ப‌யன்ற நினைப்புத்தானே CPM க்கு? இது போன்ற பச்சையான‌ திருட்டுத்தனங்கள், பொய் பித்தலாட்டங்களையெல்லாம் கையும் களவுமாக பிடித்து கேள்வி கேட்டாலும் கேட்பது அருந்ததிராயா அற்பப்புழு ஜெயலலிதாவா என்று கூட‌ பாராமல் ஒரே வரியில் தீவிரவாதி,மாவோயிஸ்ட் என்று கூறி வெட்கமே இல்லாமல் வாயை பொத்திக் கொள்கிறார்கள் இந்த யோக்கிய சிகாமணிகள்.இதெல்லாம் யாரை ஏமாற்ற நடத்தும் நாடகங்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் தோழர்களே.
இது போன்ற‌ கேள்விகளை அறிவுள்ள அனைவருமே தான் கேட்பார்கள்.மூளையுள்ள யாருக்குமே இப்படித் தான் கேள்விகள் எழும்.அவ்வளவு ஏன் இருக்க வேண்டிய இடத்தில் அந்த உறுப்பே இல்லாமல் தமிழ் நாட்டில் ஒரு ஜென்மம் இருக்கிறதே விஜயகாந்த் என்று, அது CPM ஐ பார்த்து கேள்வி கேட்கிறது என்றால் என்னவென்று எழுதுவது.

CPM த‌லைவ‌ர்க‌ளை கொஞ்ச‌ம் ரோட்டில் இற‌ங்கி வந்து பார்க்கச்சொல்லுங்கள் தோழர்களே.காரித்துப்புகிறார்கள் மக்கள்.ஆட்சியிலிருக்கும் நீயே எதுக்குடா தெருவுல நின்னு போராட்டமும் நடத்துறன்னு தினமணிக்காரன் கேள்வி கேட்கிறான்,கேலிச்சித்திரம் வரைகிறான். கண்டகண்டவனெல்லாம்,நேத்து மொளைச்ச காளானெல்லாம் கூட ‘கம்யூனிஸ்ட் கட்சியை’ பார்த்து கேள்வி கேட்குது.காங்கிரஸ்காரன் நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி வெளியப்போறதுன்னா போயித்தொலைங்களேன்டா ஏன் இன்னும் இருந்து எங்க‌ உயிர வாங்குறீங்கன்னே கேட்டுட்டான்.அப்புறமும் கூட‌ வெக்கமே இல்லாம பல்லிளிக்கிறவன்கிட்ட‌ என்ன பன்னுறது ?
நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
ஒன்று இவற்றுக்கெல்லாம் கட்சியின் பதில் என்ன என்று கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அல்லது அதற்கும் கூட அவசியம் இல்லையென்றால் வெளியேறவேண்டும்.

செய்வது தவறு என்பதை அறியாமல் செய்ப‌வ‌ர்க‌ளை ம‌ண்னிக்க‌லாம் ஆனால் இருப்ப‌து சாக்க‌டை என்று தெரிந்தும் ஊதுவ‌ர்த்தி கொளுத்திக்கொண்டிருப்பவர்களை என்ன‌ செய்வ‌து? அன்று CPM லிருந்து சிந்தித்துகேள்வி கேட்டதால் தான் எங்க‌ள் முன்னோர்க‌ள் ‘ந‌க்ச‌ல்பாரி’க‌ளானார்க‌ள்.இன்று CPM ல் இருக்கும் நீங்க‌ளும் சிந்தியுங்க‌ள் புரட்சியாளர்களாக மாறுங்கள்..

ஏன் CPM ஐயே திட்டுகிறார்க‌ள் என்று யோசிப்பதை விட்டுவிட்டு அந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ச‌ரியா த‌வறா என்கிற கண்ணோட்டத்தில் யோசியுங்க‌ள், முடிவெடுங்க‌ள்.

ந‌க்ச‌லைட்டுகள்,தீவிர‌வாதிக‌ள் என்று கூறி உங்க‌ளை ப‌ய‌முறுத்துகிறார்க‌ளே அவ‌ர்க‌ளிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள் தீவிர‌வாத‌ம் என்றால் என்ன‌ என்று, இந்த மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மக்களுக்காக நிற்கும் அனைவரையுமே இந்த கொடுங்கோண்மை அரசு எந்திரம் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் தான் அடையாளப்படுத்துகிறது.
அதே போல பயங்கரவாத அரசால் மக்கள் கொன்று குவிக்கப்படும் பொழுது கோழைத்தனமாக‌ அமைதிகாக்கும் துரோகிகளையும் இந்த காலகட்டம் அடையாள‌ப்படுத்தும்.

நாங்கள் தீவிரவாதிகள்,காட்டில் இருப்பவர்கள், ஆயுதப்போராட்டம் நடத்துபவர்கள் என்று ஒரு பொய்யை CPM பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது.
நாங்கள் எந்த‌‌ காட்டில் இருக்கிறோம்? த‌ற்போது ஆயுதப்போராட்டமா நடத்திக்கொண்டிருக்கிறோம்?
எமது அமைப்புகளும்,ப‌த்திரிகைகளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌வையா?தமிழ் நாட்டில் எந்த அமைப்பும் சொல்லாத பொய்கள் இவை. இவை அனைத்தும் CPM மட்டுமே சொல்லி வருகிற‌ ப‌ச்சை பொய்க‌ள்.
ஏன் இவ்வாறு அப்ப‌ட்ட‌மாக‌ பொய் பேசுகிறார்க‌ள்?
மேற்கூறிய அனைத்தும் பொய்கள் என்பது ஒரு புறம் இருக்க அவை அனைத்தும் CPMன் விருப்பமாக இருக்கிறது.அதாவது எம்மை தீவிரவாதிகளாக உங்களிடம் அடையாளப்படுத்த வேண்டும் என்பதும்,காட்டில் சுற்றியலைய வேண்டும்
என்பதும் மொத்ததில் நாங்கள் ஊருக்குள் இருக்கக்கூடாது என்பதும்
CPMன் ஆசையாக இருக்கிறது.கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க திரானியற்ற இந்த‌ கோழைகள் தமது மூஞ்சி கிழிந்து தொங்கி விடாமலிருக்க எம்மை காட்டில் சுற்றுபவர்களாக சித்தரிக்கிறார்கள். CPM இவ்வாறு சொல்வதெல்லம் உண்மையா இல்லையா என்று கேளுங்கள் தோழர்களே. இன்னொரு கட்சியை இப்படி ஆளும் வர்க்க அடியாளைப்போல‌ முத்திரை குத்துபவன் யாராக இருக்க முடியும் என்ப‌தை சிந்தித்து பாருங்க‌ள்.CPM க‌ட்சி எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்ப‌து புரியும்.

ஒரு க‌ம்யூனிஸ்ட் ஆயுத‌ம் ஏந்த‌ வேண்டுமா கூடாதா அப்ப‌டி ஏந்த‌வேண்டுமென்றால் ஏன் ஏந்த‌ வேண்டும் இதைப்ப‌ற்றி அவ‌ர்க‌ளின் க‌ருத்து என்ன‌ என்று கேட்டுப்பாருங்க‌ள்.உல‌கிற்கே முத‌ல் சோச‌லிச‌ தீப‌த்தை ஏற்றிய‌ ர‌சிய‌ ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏந்த‌வில்லையா அதைப்ப‌ற்றிப்ப‌ட‌ர்ந்த‌ சீன‌ப்புர‌ட்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏந்த‌வில்லையா? அவ‌ர்க‌ளும்
தீவிர‌வாதிக‌ளோ ? துப்பாக்கி குழாயிலிருந்து தான் அர‌சிய‌ல‌திகார‌ம் பிற‌க்கிற‌து என்று கூறினாரே மாவோ அவ‌ரும் தீவிர‌வாதியா? ச‌ரி ஆயுத‌த்தை ஏந்தித்தான் ஆக‌ வேண்டுமென்ற‌ல் புத்த‌தேவும் பிர‌காக்ஷ்கார‌த்தும் அத்வானியையும் ம‌ன்மோக‌னையும் சுட்டுத்த‌ள்ளவா துப்பாக்கியை ஏந்துவார்கள்‌? ஆயுத‌ம் தான் எதிரியின் முடிவுரையையும் உழைக்கும் மக்களின் முன்னுரையையும் எழுதும் எழுதுகோள்.அது இல்லாம‌ல் அன்று பாரிசிலிருந்து இன்று காத்மான்டு வ‌ரை ந‌ம‌து ம‌க்க‌ள் அதிகார‌க்கலை வ‌டிக்க‌ப்ப‌ட்டிருக்க‌ முடியாது.எதிரி காகித‌த்தில் விச‌த்தைக் க‌க்கும் போது ந‌ம‌து எழுதுகோள் முனை காகித‌த்தில் குத்திக்கிழிக்கிற‌து.ஆனால் அவனுடைய ஆயுதம் நம்முடைய குருதியை கேட்டு நிற்கும் பொழுது நம்முடைய ஆயுதமும் வெறிகொண்டு குருதி குடிக்கும்.முதலாளித்துவ அமைப்பு முறையின் எதிர்வினையான நாம் தற்போது எந்த ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும் என்பதை ந‌ம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.அதன் படி நாங்கள் காடுகளிலும் இல்லை மலைகளிலும் இல்லை என்பதை நீங்கள் அருகில் வரும் போது தான் அறிய முடியும்.


ஒன்றை ம‌ட்டும் ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் தோழர்களே.
உண்மை,நேர்மை ஆகிய‌வற்றுக்காக ந‌ம் உட‌லிலிருந்து உயிர் பிரிந்து போக‌லாம் ஆனால் மான‌மும்,வீர‌மும் ந‌ம்மோடு ஒன்று க‌ல‌ந்து விடும்.புரட்சியாளர்கள் மட்டுமே மக்களின் நினைவுகளில் என்றும் மங்கிமறையாத நினைவுகளோடு வாழ்வார்கள்.துரோகிகள் இறந்த பின்னும் கொல்லப்படுவார்கள்.

நாம் இருக்க‌வேண்டிய‌ இட‌ம் CPM என்கிற‌ குறுகிய இருட்டறையா அல்லது எல்லையற்று அலை அலையாய் ஒளி படர்ந்து பரவும் விரிந்த‌ வானும் புல்வெளியும் கொண்ட‌ வெட்ட‌வெளியா ‌என்ப‌தை முடிவெடுங்கள்.

Thursday, June 5, 2008

விலைவாசி உயர்வு ஏன்? யார், என்ன காரணம்?

முன்பெல்லாம் விலைவாசி உய‌ர்வு என்ப‌து இன்று அடைந்துள்ள‌ ஒட்டு மொத்த‌ கொடூர‌ வ‌டிவ‌த்தை வெளிக்காட்டாத‌து ஏன்? இந்த‌ விலைவாசி ஏன் இப்படி உய‌ர்கிற‌து? முறையாக‌ ஒரு நாட்டில் அந்த நாட்டின் விவசாயிகள் உற்ப‌த்தி செய்த‌ பொருட்க‌ளை அந்த‌ நாட்டின் அர‌சு தான் கொள்முத‌ல் செய்ய‌ வேண்டும்,விநியோகிக்கவேண்டும். விலைவாசியை குறைப்பதற்கும்,விவசா‌ய‌ உற்ப‌த்தியை பெருக்குவ‌தற்குமான‌‌ வ‌ழிமுறைக‌ளை அந்த‌ அரசு தான் திட்டமிட‌ வேண்டும். ஆனால் உல‌கின் மிக‌ப்பெரிய‌ ஜ‌ன‌நாய‌க‌ நாடு என்று பீற்றிக்கொள்ளும் இந்த‌ வெத்து வேட்டு இந்திய‌ அரசு, தனது க‌ட‌மையான உணவு தானிய‌ கொள்முதலை கொஞ்ச‌ம்கொஞ்ச‌மாக‌ கைக‌ழுகி இன்று பெரும்பான்மையாக‌ அந்த‌ பணியிலிருந்து த‌ன்னை விடுவித்துக்கொண்டுள்ள‌து. இப்படி இந்த அடிமை மகாராஜா நிராகரித்து ஒதுக்கிய‌‌ க‌டமையை அதன் ஆண்டைகளான‌ க‌மிச‌ன் ம‌ண்டிக்கார‌ர்களும்,த‌ர‌கு முத‌லாளிகளும் கன்னும் கருத்துமாக செய்து வருகிறாகள்.

இத‌னால் உற்ப‌த்திக்கான‌ செல‌வைக்கூட‌ பெற‌முடியாம‌ல் விவ‌சாயி ந‌ட்ட‌ம‌டைகிறான்.விவ‌சாய‌ம் செய்ய‌ வாங்கிய‌ க‌ட‌னை க‌ட்ட‌ முடியாம‌ல் த‌ற்கொலை செய்து கொள்கிறான்.இத‌ன் விளைவாக‌ சாவு எண்ணிக்கை க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளில் ம‌ட்டும் ஒன்ற‌‌ரை ல‌ட்ச‌ம் விவ‌சாயிக‌ளின் உயிரை குடித்துள்ள‌து. இப்ப‌டி திட்ட‌மிட்டே உண‌வு உற்ப‌த்தி அழிக்க‌ப்ப‌டுவ‌தாலும்,த‌ப்பிப்பிழைக்கும்‌ ந‌டுத்த‌ர‌ ம‌ற்றும் சிறு விவ‌‌சாயிக‌ள் ஒப்ப‌ந்த‌ விவ‌சாய‌ம் என்ற பெய‌ரில் ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் கூறும் ப‌ண‌ப்ப‌யிறுக‌ளை விளைவிப்ப‌தாலும் விவ‌சாய‌ உற்ப‌த்தி அடியோடு சீர் குலைந்துவிட்ட‌து.

ம‌ட்டுமின்றி இங்கு ம‌க்க‌ள் ப‌சியால் வாடிச்சாகும் போது, உண‌வு ப‌ற்றாக்குறை ஏற்ப‌ட்டு உயிரிழ‌ப்புக‌ள் ஏற்ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் போது, இந்த கேடுகெட்ட நிலையில் இந்த அடிமை வல்லரசு சோயாவையும்,பாமாயிலை‌யும் இன்ன‌ பிற‌ உண‌வுப்பொருட்க‌ளையும் உயிரி எரிபொருள் [BIO FUEL] என்ற வக்கிரமான திட்ட‌த்திற்காக‌ குறைந்த‌ விலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய‌ ப‌காசூர‌ர்க‌ளின் எரிபொருள் தேவைக்காக‌ ஏற்றும‌தி செய்கிற‌து இந்த‌ கேடுகெட்ட‌ இந்திய‌ அர‌சு. ந‌ம் நாட்டில் ம‌க்க‌ள் உண்ண உணவில்லாமல் சாகும் போது,அவற்றை உயிரி எரிபொருளாக‌ மாற்றி வெள்ளைக்காரன் காரில் செல்லும் இந்த பச்சைப்படுகொலை திட்ட‌த்தை தாங்கிப்பிடிக்கிற‌து இந்திய‌ அரசு. இதனால் உணவு தானிய‌ கையிருப்பு குறைகிற‌து. இதையே சாக்காக‌ வைத்து ம‌ற்ற‌ நாடுக‌ளிலிருந்து அதே உணவுப்பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதியும் செய்கிறது இந்த அரசு. இதன் தொடர்ச்சி தான் இந்த விலைவாசி உயர்வு.

மூன்றாமுல‌க‌ நாடுக‌ளில் வாழும் ம‌க்க‌ளை திட்ட‌மிட்டே ப‌டுகொலை செய்வ‌த‌ற்கான‌ திட்ட‌ம் தான் இது. இந்த நோக்கத்தை த‌விர இந்த கொலை பாதக‌ திட்டத்திற்கு வேறு என்ன‌‌ உள்நோக்க‌ம் இருக்கமுடியும்? இதெல்லாம் போதாதென்று முன் பேர‌ வ‌ர்த்த‌க‌ம் என்ற‌ சூதா‌ட்ட‌த்தை ச‌ட்டத்தின் மூலம் ம‌க்க‌ள் மீது தினிக்கிற‌து இந்த‌ அடிமை அர‌சு. இத‌ன் ப‌டி உற்ப‌த்தி செய்த‌ பொருளுக்கு விலை நிர்ண‌‌ய உரிமையை பெற முடியாமல் செத்துத்தவிக்கும் விவசாயிகளின் விளை பொருள்கள் எதையும் கண்ணில் கூட பார்த்திராத, விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத சில பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் கையில் உணவுப்பொருட்க‌ளை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது இந்த அரசு. அதன் படி உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களிடம் கண்ணீர் சிந்திய விவசாயி, இப்பொழுது கோட் சூட் போட்ட பன்றிகளிடம் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்த உணவுப்பொருளின் விலையில் வெறும் பத்து சதவீதம் மட்டுமே முன் பணம் கட்டி அதையே நூறு சதவீதமாகவும் இரு நூறு சதவீதமாகவும் லாபத்துடன் விற்றுக்கொழுக்கும் இந்த் சூத்தாட்டத்தின் பெயர் தான் முன் பேர வர்த்தகம்[online trading]. இதை த‌டை செய்து ம‌க்க‌ளை காக்க‌ வேண்டிய‌ அரசே இதற்கு விசிலடித்து ஊக்க‌ப்ப‌டுத்துகிற‌து. மேற்சொன்ன‌வை சில‌ உதார‌ண‌ங்க‌ள் மட்டும் தான் இந்த‌ விலைவாசி உய‌ர்வு என்னும் கொடிய நோயின் பிற‌ப்பிட‌ம் இவை அனைத்திலிருந்தும் தான் துவங்குகிறது. இவை எதுவும் தனித்தனி விசயம் அல்ல‌. இவை அனைத்திற்கும் ஆணி வேராக இருப்பது, க‌ட‌ந்த‌ ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்தியாவை ஆண்டு வ‌ந்த‌ காங்கிரசு, பா.ஜ‌.க‌ ஓட்டுப்பொறுக்கி தரகுமுதலாளித்துவ கும்பல் மாறி மாறி அமல் ப‌டுத்தி வ‌ந்த‌ “த‌னியார் ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம், உல‌க‌ம‌ய‌ம் என்கிற மறுகாலனியாதிக்க‌ பொருளாதார‌ கொள்கை” தான். இந்த கொடிய‌ விலைவாசி உய‌ர்வின் மூல‌ம் இதில் தான் உள்ள‌து. பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல், டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விசம்.

உள் நாட்டு விவசாய உற்ப்பத்தியை திட்டமிட்டே கொஞ்சம்கொஞ்சமாக அழித்து இன்று விவசாயத்துறையே ஒரு பாழடைந்த‌ கட்டிடம் போல ஆகிவிட்டது. எப்போது தட்டிவிட்டாலும் விழுந்து நொருங்கிவிடும் நிலையில் தான் இன்று இந்திய விவசாயத்துறை இருக்கிறது. இப்படி விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட விவசாயி தன் உயிரை காத்துகொள்ள நகரத்திற்கு ஓட்டமெடுக்கிறான். ந‌கரத்திற்கு வந்து கட்டிட தொழிலாளியாக கசக்கி பிழியப்படுகிறான், காவல்காரனாக பன்னாட்டு நிறுவன‌த்தின் வாசலில் காவல் காத்து நிற்கிறான். எந்த பக்கம் திரும்பினாலும் மறுகாலனிய கத்தி குத்திக்கிழிக்கிறது. மறுகாலனியாதிக்கத்தின் உண்மையான கோரமுகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத்துவங்கியுள்ளது. உழைக்கும் மக்களை மட்டுமின்றி “அனைத்து தரப்பினரையும்” அது தாக்கத்தொடங்கியுள்ளது எந்த பக்கம் போனாலும் சுற்றிச்சுற்றி அடிக்கிறார்கள், இந்த அடிமை அரசும் அதன் எசமானர்களான பன்னாட்டு முதலாளிகளும். இனி வரும் சில காலங்களில் அரிசிக்கும், எண்ணைக்கும், கோதுமைக்கும் வெளி நாடுகளிலிருந்து கப்பல் வருமா என மக்கள் துறைமுகத்தில் காத்து நிற்கின்ற ஒரு கொடூரம் நிஜமாகும் நாள் வெகுதூரம் இல்லை என்று தெரிகிறது. பன்னாட்டு கம்பெனிகளின் செல்ல பிள்ளைகள் (எ) செல்ல நாய்களான‌ ம‌ன்மோகன், பா.சிதம்பரம் கூட்டணி மீத‌மிருக்கும் ஓராண்டையும் இதை விட‌க்கேவ‌ல‌மாக‌த்தான் ஆட்சி செய்ய‌ப்போகிற‌து. என்ன‌ செய்வது? வாழ்த்த‌லாமா?
அல்ல‌து இந்த‌ கூட்ட‌ணியின் ஆட்சியை வாழ்த்தி, பாதுகாப்ப‌வ‌னை நீங்க‌ள் என்ன‌வென்று சொல்வீர்க‌ள்?
மாமாக்க‌ளுக்கு மாமா வேலை பார்க்கும் மாமா என்றா?

குண்டைப் போடப்போறோம்,போடப்போறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தவன்
எவ்வ‌ள‌வு
பெரிய குண்டைப்போடப்போகிறான் என்று பார்த்துக்கொண்டுந்தார்களே தவிர யாரும்
ஏன்டா குண்டைப்போடுற என்று கேட்கவில்லை. கடைசியில் குண்டும் விழுந்தேவிட்டது.

ஏற்கெனவே பள்ளமான மண்ணுல‌ குண்டைத் தூக்கிவீசி மேலும் குழியை
படுபாதாளபள்ள‌மாக்கிட்டானுங்க மன்மோகன் மாமா தரகு கம்பெனி.

கதகதப்பான மோன நிலையிலிருந்த ஆத்மாக்களுக்கு விலைவாசி உயர்வு என்கிற சில்லிடுகிற பச்சைத்தண்ணீர் முகத்தில் ஸீரோ டிகிரி ஊசியைப்போல‌ அறைந்து‌ ஏற்ப‌டுத்திய‌ பிரக்ஞ்சையால் மிக‌ப்பெரிய‌ க‌ளேப‌ரமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருத்தன் மட்டும் ஓரமா நின்னு கத்திக்கிட்டுப்பானே எங்கே அவ‌ங்க‌ன்னு தேடுனா, அதாங்க நம்ம பன்றித்தொழுவத்தின் கிளீனர் பாய்ஸ் CPM காரங்க‌. அவங்க‌ என்ன பன்னப்போறாங்கன்னு காத்திருந்தோம், காத்திருந்தது வீண் போகவில்லை. கடைசியாக அவர்களிடமிருந்தும் ஒரு குண்டு வந்து விழுந்தது! என்னடா இது ஒரே குண்டா இருக்குன்னு பயப்படாதீங்க, இந்த குண்டு மன்மோகன் மாமா கம்பெனிக்கு எதிரான குண்டு, அதன் அஸ்திவாரத்தையே ஆட்டம் கானவைக்கிற குண்டு.
அதாவது "ஒரு வாரத்திற்கு விலைவாசி உயர்விற்கு எதிராக போராடப்போகிறதாம்" ந‌ம்ம‌ CPM செக்குமாடுங்க‌.

எட்ட‌ப்ப‌ன் ம‌ன்மோக‌னின் ஆட்சியில் இது எத்த‌னையாவ‌து பாம் என்ப‌த‌ற்கு CPM கார‌ன் தான் ச‌ரியா க‌ண‌க்கு வ‌ச்சிருப்பான். இது டைம் பாமா, மைன்ஸா என்கிற‌ ர‌க‌சிய‌மும் அவ‌ங்க‌ளுக்கு தான் தெரியும்.

இப்படி விலைவாசி உயர்வு, பஞ்சம், பட்டினிச்சவுகள், விவசாயிகளின் கொத்துக்கொத்தான‌ தற்கொலைகள் என்று இவ்வளவு கொடூரமாக‌ இந்த‌ ஆட்சி ம‌க்க‌ளை குலைகுலையாக‌ காவு வாங்கிக்கொண்டிருக்கிற‌தே இந்த‌ நேர‌த்திலாவ‌து ம‌க்க‌ளுக்கான‌ க‌ட்சி என்று கூறிக்கொள்ளும்‌ CPM நியாய‌மாக‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்? ம‌க்க‌ளுக்கு குழி தோண்டும் உன‌க்கு நான் குழி தோண்டுகிறேன் பார் என்று கூறி ஆத‌ர‌வை திரும்ப‌ப்பெற்று கைக்கூலிகளின் காலை வாரிவிட வேண்டும், அவ‌னை க‌விழ்க்க‌ வேண்டும் என்று தானே யாரும் நியாய‌மாக‌ எதிர் பார்ப்பார்க‌ள். அனால் இவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் அது தான் மோசமான‌ மூட‌ ந‌ம்பிக்கை ஆனால் அவ‌ர்க‌ளின் அணிக‌ளே அவ்வாறு ஒரு மூட‌ ந‌ம்பிக்கையால் தான் பீடிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

விலைவாசி உய‌ர்வு ம‌க்க‌ளை விசம் போல‌ கொஞ்சம், கொஞ்ச‌மாக‌ கொல்கிற‌து. வாடிய‌ வ‌யிற்றுடனும், க‌ட‌ன்கார‌னிட‌ம் வ‌ச‌வு வாங்கிய‌ மிர‌ட்சியுட‌னும் நடைபிணமாகவே மாறிவிட்ட‌ விவ‌சாயிகளுக்கும், பிற‌ உழைக்கும் ம‌க்க‌ளுக்கும், மாத‌ வ‌ருவாயில் துன்டு விழுந்துடுச்சே க‌ட‌ன் வேற‌ கூடிட்டே போகுதே, இனி எப்ப‌டி பிழைப்பை ந‌ட‌த்துவ‌து என்று இடிந்து போய் நிற்கும் ந‌டுத்த‌ர‌ வ‌ர்க‌த்திற்கும் இந்த‌ விச‌ வித்தின் ஆணி வேர் எங்கே இருக்கிற‌து என்று தெரியாம‌ல் இருக்க‌லாம்,ஆனால் “முற்போக்கூ..” கூட்ட‌ணி க‌ட்டி ஆட்சி ந‌ட‌த்தும் CPM க‌ம்யூனிஸ்டு தோழ‌ர்க‌ளுக்கு தெரியாதா என்ன‌ ?

இந்த‌ க‌ழுதைக‌ளுக்கு தெரிந்து என்ன‌ சார் ஆக‌ப்போகிறது, அதுக்கு பீக்கும் கற்பூரத்துக்குமே வித்தியாச‌ம் தெரிய‌ல‌. உண்மையில‌ ந‌ம‌க்கு தான் சார் அறிவு இல்லை இது குதிரையில்ல‌ க‌ழுதையின்னு தெரிஞ்சுக்க நமக்கு இவ்வ‌ள‌வு நாள் ஆகியிருக்கு என்று இந்த போலி கம்யூனிஸ கழுதைகளை காறித்துப்பினார் ஒரு கடைக்காரர்.

இது க‌ழுதையும் கூட‌ இல்லை, நரிகள் என்று சொல்வார்க‌ள் அல்ல‌வா அது போல இவைகள் ந‌ரித்தன‌மான‌ க‌ழுதைகள், அதாவ‌து க‌ழுதை ந‌ரிக‌ள்.

இப்போது ஏறியிருக்கும் இந்த‌ விலைவாசி உய‌ர்வு என்ப‌து என்றைக்காவ‌து குறைந்து விடும் என்று எண்ணுவது வெறும் கனவு மட்டுமே, மாறாக ஏறத்தான் செய்யும். இதற்கு முன்பு ஏறிய விலைகள் என்றைக்காவது இறங்கியதுண்டா? இந்த‌ போலி ஜ‌ன‌நாயக அடிமை அர‌சும், அத‌ன் கொள்கைகளை காத்து நிற்கும் மறு'காலனிய' காலகட்டத்தின் எட்டப்பன்கள், தொன்டைமான்கள், மீர் ஜாபர்களை ஒழித்துக்கட்டும்‌ வ‌ரை விலைவாசி குறைவதைப் பற்றி நீங்கள் உங்கள் சொந்த வீட்டில், சொந்த‌ கட்டிலில் படுத்துக்கொண்டு க‌னவு கண்டால் கூட‌ உங்க‌ளை கைது செய்ய புதிய சட்டம் இயற்றப்படலாம் யார் கண்டது, ஒரு வேளை CPM காம்ரேடுக‌ளிட‌ம் கேட்டால் தெரியும்.