அந்த ப்ளக்ஸ் போர்டை பார்த்தாலே கண்கள் எல்லாம் பரவசமாகின. ஒரு பக்கத்தில் RSS அன்னை சிங்கத்தின் மீது சாய்ந்து நின்று கொண்டு நம்மை பார்க்க, இன்னொரு பக்கத்தில் உடன்பிறப்புகளின் மூத்த அண்ணன் கலைஞர் கருணாநிதியும் அவரது தவப் புதல்வர், இன்றைய ஊராட்சியான (நாளைய தமிழகமாம்) ஸ்டாலின் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். என்னயிது கலப்பு திருமணம் போல இருக்கு என்று பார்த்தால் பெருங்குடியில் இருக்கும் பாரதமாதா இளைஞர் மன்றம் தனது 13வது ஆண்டு துவக்க விழாவுக்கு வைத்த விளம்பர தட்டி இது. இந்துத்துவ இளைஞர் மன்றத்தை உடன்பிறப்புகள் கைப்பற்ற, கலைஞரையோ பாரத மாதாவே (சோனியாவும், பாரத மாதாவும் ஒன்னுதான்) கைப்பற்றியாகிவிட்டது.
கருணாநிதி RSSன் கிராம பூசாரி சங்கத்தை திறந்து வைக்கும் போது அவரது உடன்பிறப்புகள் ஆப்டர் ஆல் ஒரு பாரத மாதா படத்துடன் போஸ் கொடுக்கக் கூடாதா என்ன? என்ன பாவம் அந்த சிங்கம்தான் 'சிங்கிளா' இந்த 'கூட்டத்து'க்கிட்ட மாட்டிக்கிட்டு பேஸ்து அடிச்சிப் போய் நிக்குது. ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் சேர்த்து தலைவராக அறிவிக்கப்பட்டவர் இன்று விபிடனனாக துரோகம் இழைத்து வரும் பொழுது அவரது அல்லக்கைகள் இதனை செய்துள்ளது திமுகவின் எதிர்கால வளர்ச்சியை முன்னறிந்ததொரு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. இன்னமும் கருணாநிதியின் துரோகத்தை சமரசம், சமரசம் என்று சாமரம் வீசும் அதிர்ஷ்டம் (கெட்ட) பார்வையுடயைவர்களுக்கு புரிந்தால் சரிதான்.
சூரியன்