Friday, February 22, 2008

நேபாளமே... செங்கொடியே..செம்படையே..












ஒழித்துவிட்டோம் என்றவர்களின்
உச்சியைப் பிளக்கும் சூரியன் நீ
புதைத்துவிட்டோம் என்றவர்களுக்கு புதைகுழி நீ.

இமையத்தை குன்றாக்கி உயரத்தில் நின்றாய்
துடிப்பின் கடைசி நொடிகளில் நின்ற
இதயங்களின் துடிப்பாகித் தொடர்ந்தாய்.

புத்தன் பிறந்த அதே மண்னில்
புத்தன் கண்ட அதே கனவின் நீட்சியாய்
உயந்த செங்கொடியே, செம்படையே..

அவன் வீழ்த்த எண்ணி
அவனை வீழ்த்திய
அதே பயங்கரவாத பார்ப்பனியத்தின்
உயிரைத் துடிக்கத் துடிக்க உருவிக்கொண்டிருக்கிறாய் நீ

வரலாற்று வழி எங்கும் நம்மிடம்
வற்ற வற்ற குடித்த குருதியின்
கடைசி சொட்டு வரைக் கக்க வைப்பாய் நீ

இந்த பார்ப்பன வதையை கண்டிருந்தால்
புத்தன் மடைதிறந்த மகிழ்சியோடு
குடல்களை உருவி மாலை தரித்துக்கொண்டு
களி நடனம் ஆடி ஓய்ந்திருப்பான் .
எனினும் இது அவனுடைய ஒரு ஆசை தான்!

கபிலவாஸ்து எங்கும் வெப்பம் பரப்பிய
புத்தனுடைய ஆசையின் ஏக்கப் பெருமூச்சு
பெருநெருப்பாய் பற்றி எரிகிறது.

புத்தன் சித்தன் முதல் எங்கள் காலடித்தடங்களின்
கனவுகளை நாங்கள் கண் முன்னால் காண்கிறோம்
எனினும் கனவுகள் இன்னும் முடிவுறவில்லை...

கனவுகளை கனவுகளாகவே முடித்து வைக்க
ஏகாதிபத்திய வெறிநாய்கள் தலையிடும் போது
அவற்றை எப்படி கொத்திக்
கூறு போட வேண்டும் என்பதை
நாய்கடிபட்ட நாடுகளுக்கு
நீ கற்றுத்தருவாய்.

புத்தன் பிறந்த அதே மண்ணில்
புத்தன் கண்ட அதே கனவை
அவனுடைய மாபெரும் ஆசையை
செங்கொடியே, செம்படையே
நீ நிறைவேற்றியே தீருவாய்.

2 comments:

Anonymous said...

நல்ல உணர்ச்சி பெருக்கான கவிதையை பதிவிட்டதற்கு நன்றி தோழர்.

இனி வரவிருக்கும் எல்லா நாட்களும் நமக்கு இதே உணர்ச்சி தொடரப் போவது மட்டும் தெளிவாய்த் தெரிகிறது.

இதோ ஒரு புதிய வரலாறு நம் கண் முன்னே எழுதப்படுகிறது.

கொடூரத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல் சூழலில், இந்தியாவை விடக் கேவலமான பார்ப்பண பாதிப்புக் குள்ளான மண்ணில் கட்டப்பட்டுள்ள இந்த புரட்சிகர செம்படை அசாதாரணமானது.

இவர்களுடைய வேகமும் தீரமும் தியாகமும் நம்முடைய புரட்சியை நோக்கிய போராட்டத்தின் வேகத்தினை விமர்சிப்பதாகவே நான் உணர்கிறேன்.

நிறைய விஷயங்கள் இது பற்றி தேவைப்படுகிறது தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!

சூரியன் said...

நன்றி தோழர் பகத்சிங்

பல‌ புரட்சிகளின் வரலாற்றை நாம் படித்திருக்கிறோம் ஆனால்
இப்பொழுது நம் கண்ணுக்கு முன்னால் ஒரு புரட்சியை நமது
காலத்தில் கண்கூடாக‌ கான்கிறோம், தொடர்ந்து அது வெல்லப்போவதையும்
அதன் பிறகு சர்வதேச அளவில் அது உண்டாக்கும் அதிர்வுகளையும் இன்னும் பல நிகழ்சிகளையும் தொடர்ந்து பார்க்கலாம் தோழர்.