Monday, March 17, 2008

சிதம்பரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்


தில்லை சிற்றம்பலம் ஏறியது தமிழ் !
வெற்றி விழா...
சிறை சென்ற‌ போராளிகளுக்கு பாராட்டு விழா...





பொதுக்கூட்டம்
நாள்: 29. 3. 2008 சனி மாலை 5 மணி
இடம்: பெரியார் திட‌ல், மேல‌ வீதி,
சித‌ம்ப‌ர‌ம்.




தலைமை:
வ‌ழ‌க்குரைஞர். சி.ராஜு,
மாநில‌ ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்.



வரவேற்புரை:
வ‌ழ‌க்குரைஞ‌ர். திருமார்ப‌ன்
வ‌ழ‌க்குரைஞ‌ர் அணி வி.சி.க‌.


முன்னிலை:
சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி,
குமுடிமூலை.


திரு. V.V சுவாமி நாதன்,வ‌ழ‌க்குரைஞர்,
முன்னாள் இந்து அற‌நிலைய‌த்துறை அமைச்ச‌ர்,
சித‌ம்ப‌ர‌ம்.



திரு. சந்திரபாண்டியன்
முன்னாள் ந‌க‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர்,பா.ம‌.க‌,
சித‌ம்ப‌ர‌ம்.



உரையாற்றுவோர்:
வ‌ழ‌க்குரைஞர் துரை. சந்திரசேகரன்,
துணைப்பொதுச்செய‌லாள‌ர் தி.க‌



பேரா இராச‌.குழந்தைவேலனார்,
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்.




தோழ‌ர் து.பாலு
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி,
க‌ட‌லூர்.


தோழ‌ர் அனந்த குமார்,
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌ணி,
பாண்டிச்சேரி.


தோழ‌ர் அம்பேத்க‌ர்
மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ர்,
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி,
விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ம்.


வ‌ழ‌க்குரைஞர் வாஞ்சிநாத‌ன்
மாநில துணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
ம‌துரை.



திரு. இரா.காவிய‌ச்செல்வ‌ன்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.



சிற‌ப்புரை

தோழ‌ர் ம‌ருதைய‌ன்
பொதுச்செய‌லாளர்,
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்.



திரு. தி.வேல்முருக‌ன்
ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌ன்ருட்டி,
த‌லைவ‌ர்,அர‌சு உறுதி மொழிக்குழு.



திரு.சிந்தனைச்செல்வன்.
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி.




பேராசிரிய‌ர் பெரியார்தாச‌ன்.





ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் புரட்சிக‌ர‌ க‌லை நிக‌ழ்ச்சி
மாலை 5 ம‌ணிக்கு ந‌டை பெறும்.





ந‌ன்றியுரை:

வ‌ழ‌க்குரைஞர்.சி.செந்தில்
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்,
சித‌ம்ப‌ர‌ம்.




ப‌ங்கேற்போர்:
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌ணி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் இளைஞ‌ர் முன்ன‌ணி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த்தொழிலாள‌ர் முன்ன‌ணி
க‌ட‌லூர் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
விடுதைச்சிறுத்தைக‌ள் க‌ட்சி
பாட்ட‌ளி ம‌க்க‌ள் க‌ட்சி
திராவிட‌ர் க‌ழ‌க‌ம்.




நிக‌ழ்ச்சி ஒருங்கிணைப்பு:
மனித உரிமை பாதுகாப்பு மைய‌ம்
க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம்.

Wednesday, March 5, 2008

சிதம்பரம் நடராஜன் கோயிலில் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடக்கூடாது (பின்ன தேவாரத்தை இங்கிலிஷிலயா பாடம் முடியும்?) என்று பல நூற்றாண்டுகளாக தமிழர்களை அவமானப்படுத்திவந்த தீட்சிதர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்த்து, இன்று (5.3.2008) காலை 10 மணியளவில்
மக்கள் கலை இலக்கிய கழக
தோழர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரத்தை பாடியிருக்கிறார்கள்.

தோழர்களின் தொடர்ந்த முயற்சியினால் போலிசுக்குக்கூட பயப்படாத தீட்சிதர்கள், தோழர்களுக்கு மாலை அணிவித்து நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
இது வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்.
இந்த வரலாற்றை நிகழ்த்திய சிவனடியார் பெரியவர் ஆறுமுகசாமிக்கும்,
மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கிறிஞர்களுக்கும் நமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தீட்சிதர்களிடம், அடிவாங்கிய காவல் துறை - தீட்சிதர்களை ஒன்று செய்யமுடியாத நிலையில், தேவாரம் பாடச் சென்ற நம் தோழர்களின் மீது வால்டர் தேவவரம்போல் பாய்ந்து தாக்குதல் நடத்திய வன்முறை கண்டிக்கத்தக்கது. (2.3.2008அன்று)
***
“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்ற கேள்வி வருகிறது. அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.
ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது.
அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்வது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும். அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது. ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்னங்க நியாயம்?”
பக்தர்கள் போய் பாட வேண்டியதுதானே?
பக்தர்கள் சுயமரியாதை இல்லாமல் இருக்கறதனால அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள்தான் பாடி தொலைக்க வேண்டியிருக்கு.
கோயில் நுழைவு போராட்டம், கருவறை நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியத இருக்கு.
எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு.
என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு உங்க பக்தி.


நன்றி
வே.மதிமாறன்
mathimaran.wordpress.com