Monday, March 16, 2009

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்!!!

லையுலகில் திடீரென்று 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கோட்பாட்டின் மேன்மை குறித்து பரப்புரை நடந்தேறி வருகிறது. இன்னிலையில் இந்த கோட்பாட்டின் உண்மையான பொருள் என்னவென்று கீழே சொல்லப்பட்டுள்ளது.

'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்பது சாதிய தத்துவமாகும். நால் வர்ணங்களையும் அதற்குரிய கடமைகளையும் படைத்தவன் நானே என்று சொன்னான் கிருஷ்ணன். அந்த கடமைகளை பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்று சொன்னதைதான் இப்பொழுது ஏதோ பெரிய சூத்திரம் போல பிதற்றுகிறார்கள். இதே விசயத்தைத்தான் நரமாமிச நரேந்திர மோடி குஜராத்தில் தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அங்குள்ள மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது தவம் என்று குறிப்பிட்டு தனது புத்தகத்தில் எழுதியுள்ளான் மோடி.

கிருஷ்ணன் மேலும் ஒரு படி சென்று இந்த தர்மம் எப்பொழுதெல்லாம் மீறப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதரித்து மீண்டும் (சாதிய) தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று சொல்லியுள்ளான்.

கீதாவின் சாரம் எனப்படும் இந்த பிற்போக்கு தத்துவம், இந்திய சமுகத்தை ஆயிரம் வருட இருட்டில் தள்ளி இந்தியாவின் வளர்ச்சியையே முடக்கி போட்ட ஒரு நாசகர தத்துவமாகும். வரலாற்றுப் பூர்வமாக இந்த தத்துவத்தின் கதை இது என்றால், யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.

இந்த விவகாரத்தில் விவாதம் செய்ய வருபவர்கள் முதலில் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' எனும் மக்கள் விரோத குப்பைத் தத்துவம் ஒரு சாதிய தத்துவம் என்பதை விவாதம் செய்ய வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக்குகிறேன். இதனை மறுத்து பேசிவிட்டு பிறகு அதன் பொது அர்த்தத்தின் மீது வாதம் செய்வதே நேர்மையானது ஆகும்.

சாதிய சமுகமாக இந்தியாவை நாசம் செய்த வர்ணாஸ்ரம் தர்மத்தையும், அதன் தத்துவ புத்தகமான கீதையையும், அதன் கோட்பாடான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற முழக்கத்தையும், அதை எழுதிய அயோக்கியனான கிருஷ்ணன் என்ற பொம்பளை பொறுக்கியையும் பொசுக்கி எரிப்பதுதான் நமது முன்னேற்றத்திற்காக நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கும்.

சூரியன்

22 comments:

கோவி.கண்ணன் said...

:)))))))

Anonymous said...

In my point of view....

'Kadamai' -- Example take care of parents...Donot expect its good for 'punniyam' its a duty

Work as slave or master is not duty..

If you cannot understand this small thing but you try to f**k in the words

Anonymous said...

அருமையான பதிவு

rajan said...

it is really a good one. now only i understood the correct meaninng .thanks for it.
raJAN

rajan said...

NOW ONLY I UNDERSTOOD THE CORRECT MEANINNG .THANKS.
RAJAN

Unknown said...

நல்ல பதிவு தோழரே

Anonymous said...

அர்ச்சுனனை மூளைச்சலவை செய்ய, கிருஷ்ணன் சொல்லும் உபதேசங்களடங்கிய கீதையின் ஐந்து அறிவுறைகளும் மிகவும் பயங்கரமானவை.

வட இந்தியா இன்னும் வன்முறை தேசமாக சாமானியர்களுக்கு இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

பெரியார் போன்ற மனிதர்களால் தமிழகம் சிறிதாவது தெளிந்து இருக்கிறது.

மாசிலா said...

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் சில அந்த கழிசடை பதிவுகளி்ன் பதிப்பாளர்கள் இதுபோன்ற அசிங்கங்களை எழுதிவிட்டு அவர்களே பின்னூட்ட பெட்டிகளை திறந்தும்விட்டு யாராவது பதில் கருத்து இடுவார்களா என்ற மறுபலனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையிலும் பெரிய வேடிக்கை. அடுத்தமுறை எவனாவது இதுபோன்ற கிறுக்குத்தனமான வாக்கியங்களை எழுதிவிட்டு, பதிலுக்கு பின்னூட்ட பெட்டியையும் திறந்துவிட்டு இருந்தானானால் ... "அதுதான் நீ பலனை எதிர்பார்க்காதவன் ஆச்சே, அப்புறம் ஏன்டா எங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறே நாயே!"ன்னு ஒரு சூடு கொடுக்கனும்.


சாதி, மதம்(இந்து, இஸ்லாம்,கிறிஸ்தவம்), கடவுள் என்கிற பெயரில் இந்திய சமுதாயத்தை புற்று நோயாய் புறையோடி பீடித்திருக்கும் அனைத்து விஷக் கிருமிகளையும் வேருடன் அழித்தொழிக்க அயராத உழைப்புடன் கூடிய தொடர்ந்த சீரிய விழிப்புணர்வு அவசிம் தேவை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Unknown said...

அறிவே தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு அறிவற்ற மூடத்தனத்தை தனது தளத்தில் பதிவாக எழுதியவருக்கு சரியான சாட்டையடி பதிவு.

Unknown said...

அறிவே தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு அறிவற்ற மூடத்தனத்தை தனது தளத்தில் பதிவாக எழுதியவருக்கு சரியான சாட்டையடி பதிவு.

குமரன் said...

கடமையை செய்! பலனை எதிர்பாராதே! என சொன்னதற்கு, அறிவியல்பூர்வமாக நன்றாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்.

இவர்களுக்கெல்லாம் பதில் பெரியார் ஸ்டைலில், பெரியார்தாசன் ஸ்டைலில் சொல்லப்பட வேண்டும்.

வருணாசிரதர்ம படி, ஆதிக்க சாதிகள் பலனை எதிர்பார்க்கும். ஒடுக்கப்பட்ட சாதிகள் பலனை எதிர்ப்பார்க்காமல் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

இவையெல்லாம் டுபாக்கூர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆட்கள்.

சிக்கிமுக்கி said...

உண்மையான பொருளை - உட்பொருளை -ச் சொன்னதும் முகவரியில்லா மொட்டைக்கு வரும் கோவத்தைப் பாருங்கள்!...

Anonymous said...

//யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.-மாஓ சே துங்//

கிருஷ்ணன் என்ற பொம்பளை பொறுக்கி எனறால் உமது மாசேதுங் ஒரு மாமாபயல் ஆயிற்றே?

பார்க்க:http://www.worldnetdaily.com/index.php?fa=PAGE.view&pageId=56814

சூரியன் said...

//உண்மையான பொருளை - உட்பொருளை -ச் சொன்னதும் முகவரியில்லா மொட்டைக்கு வரும் கோவத்தைப் பாருங்கள்!...//

ராகவன்... உங்களைப் போன்றவர்களுக்காக...

Anonymous said...

//உண்மையான பொருளை - உட்பொருளை -ச் சொன்னதும் முகவரியில்லா மொட்டைக்கு வரும் கோவத்தைப் பாருங்கள்!...//

ராகவன்... உங்களைப் போன்றவர்களுக்காக...//

பெயரை போட்டு பின்னூட்டினால் போதாதா? எனக்கு பிலாக்கர் கணக்கு இல்லை. பின்னூட்டமிட முகவரி சான்றாக ரேசன் கார்டு வேண்டுமா?

வியாக்கயானமெல்லாம் சரிதான், ஆனால் மாமா மன்னிக்கவும், மாவோ பற்றி எழுதியதற்கு பதில்தான் காணோம்!!!

Anonymous said...

அடுத்த கட்டுரையை படித்தீர்களா,
தமிழ் மணம் முகப்பில் இதுவும்
இடம் பெற்றிருக்கிறது,

சூரியன் said...

//வியாக்கயானமெல்லாம் சரிதான், ஆனால் மாமா மன்னிக்கவும், மாவோ பற்றி எழுதியதற்கு பதில்தான் காணோம்!!!//

உனக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து... உன்னை யாரும் இங்கு வேண்டி கூப்பிடவில்லை. அப்படி அவசியம் பதில் வேண்டுமென்றால் அசுரன் தளத்தில் ஸ்டாலின் மாவோ மீதான் அவதூறுகள் குறித்து பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதில் போய் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள் :-)

சூரியன் said...

//அடுத்த கட்டுரையை படித்தீர்களா,
தமிழ் மணம் முகப்பில் இதுவும்
இடம் பெற்றிருக்கிறது,///

படித்தீர்களா.. அந்த கட்டுரை குறித்து உங்களது கருத்து என்ன? நானும் பார்த்தேன். பெரிதாக எதிர்வாதம் ஒன்றுமில்லை...

Anonymous said...

///உனக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து///

உனக்கு பதில் கொடுக்க தெரியவில்லை என்பது என் கருத்து! :-)

சூரியன் said...

எனக்குத்தன பதில் தெரியல.. நீதான் பெரிய புடுங்கியாச்சே.. அதே பின்னூட்டத்துல கொடுத்துறுக்குற பதிவுல போயி பேசு...

//அசுரன் தளத்தில் ஸ்டாலின் மாவோ மீதான் அவதூறுகள் குறித்து பதிவுகள் இடப்பட்டுள்ளன. அதில் போய் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள் :-)//

kabilan said...

nanbar suryan avargalay

sadigal illiyadipappa endru padiya barthiyar bagavath geethiya tamilil molipeyarpu seydhu alithurikerar

nan antha puthagati padith vari(mulumiyaga paditu vitten) adhu entha sdiya unarvugaliyum erpaduth villai

anmega karuthiyam manidhan inbamaga valum valiyaum soli tharugerathu plz read fully bagavthgeethi after u write

ippadiku sadigal virumbadhavan

சூரியன் said...

கபிலன் அவர்களே,

//
anmega karuthiyam manidhan inbamaga valum valiyaum soli tharugerathu plz read fully bagavthgeethi after u write//

பகவத் கீதையின் காந்தி உரை படித்துள்ளேன். இன்னும் சில உரைகளை கொஞ்சம் கொஞ்சம் படித்துள்ளேன்.

அதில் பல முன்னுக்குப் பின் முரன்பாடான, பொருத்தமில்லாத விசயங்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன். பொதுவாக ஆன்மீகம், மிஸ்டிகல் ஆன்மீகம் பேசுபவர்கள் இப்படி முன்னுக்குப் பின் பொருத்தமின்றி பேசுவதுதான் இயல்பாக உள்ளது.

விசயம அதுவல்ல. பகவத்கீதையின் சாரம் எதுவோ அதுதான் இங்கு விவாதம்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதுதான் அதன் சாரம்.

அதற்கான தர்க்க நியாயத்தை அது வர்ணம், கடமை, தர்மம் போன்றவற்றை விளக்கி பிறகு வந்தடைகிறது.

இது சாதியத்தின் தத்துவ வடிவமாகும்.

இதன்படி அமைக்கப்பட்ட, நிர்வகிக்கப்படும் சமூகம் சாதிய சமூகமாக சீரழியும். அதற்கு உதாரணம் இந்தியா.

சூரியன்