Saturday, April 26, 2008

முகிழ்த்தெழும் பாட்டாளி வர்க்கத்தின் முகாம்.



நேபாள்,
இன்று புதியதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிசம் வீழ்ந்து விட்டது, இனி மக்களுக்கு அது பயன்படாது என்ற ஏகாதிபத்திய நச்சுப்பிரச்சாரங்களையெல்லாம் மொத்தமாக சாம்பலாக்கி பேரொளி பாய்ச்சி பிரகாசிக்கிறது நேபாளத்தின் மக்கள் புரட்சி.
கம்யூனிசம் இல்லையேல் இனி வாழ்க்கையே இல்லை என்கிற நிலைக்கு மக்களை ஏகாதிபத்தியத்தின் கொடூரமான சுரண்டல் நாளும் தள்ளிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான் வரலாறு இது வரை கன்டிராத வகையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மைய்ய நீரோட்த்ததினூடாகவே ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளுக்குள் நின்று கொண்டே முதலாளித்துவத்தையும்,நிலப்பிரபுத்துவத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் தான் தமது நாயகர்கள் என்பதை தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்திய நேபாள மக்களின் விருப்பமானது ஆளும் பிற்போக்கு கும்பலின் நடு மண்டையில் விழுந்த ஜீரனிக்க முடியாத இடியாக இறங்கிக்கொண்டிருக்கிறது. இதன் அதிர்வுகளையும்,ஏகாதிபத்தியத்தின் பதட்டத்தையும், தொடை நடுங்கித்தனத்தையும் சதி வேலைகளையும் நேபாளத்தில் தேர்தல் என்கிற ஒன்று
ஜனநாயகப்பூர்வமாக நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகளும்,விருப்பத்தை மக்களும் வெளிப்படுத்திய நாட்களிலிருந்து மவோயிஸ்டுகள் வெற்றியை ஈட்டிய இந்த நாள் வரை தொடர்ச்சியாக கானமுடிகிறது. நேபாள தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மையை எட்டிக்கொண்டிருந்த போது அமெரிக்காவில் இருந்து சர்வதேச பார்வையாளராக (spy) பங்கேற்ற ஜிம்மி கார்ட்டர் "வரலாற்றில் இது போல எப்பொழுதாவது தான் நடக்கும் என்று" கூறியதும் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு இன்று வரை அமெரிக்கா வைத்திருக்கும் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் மாவோயிஸ்டுகளின் பெயர் நீக்கப்படாதிருப்பது வரை இந்த தொடை நடுக்கத்தை காண முடிகிறது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றாலே கூக்குரலிடும் அறிவு ஜீவிகள் முதல் அனைத்து தரப்பு குட்டி முதலாளித்துவ வாதிகளும் முதலாளித்துவ சர்வாதிகாரம் என்று ஒன்று இருப்பதை கானத்துணிவதில்லை.
இதோ அவர்கள் காண்பதற்கும் தெட்டத்தெளிவான உதாரணமாக முதலாளித்துவ ஜனநாயகம் தனது கோவணத்தையும் கூட அவிழ்த்தெறிந்துவிட்டு உரு மாருகிறது.
மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை போட்டுவிட்டார்கள்,வன்முறையை தூண்டவில்லை,எத்தனையோ எதிரிகள் இருந்தும் பழிக்குப்பழி தீர்க்கவில்லை மாறாக முதலாளித்துவ ஜனநாயகப்பாதையில் பயணித்து தான் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். இந்த உண்மையை ஏகாதிபத்தியத்தாலும்,அவனுக்கு குன்டி கழுகி விடும் இந்திய ஆளும் கும்பலாலும் ஜீரனிக்க முடியவில்லை,எனவே தான் அமெரிக்காவின் அடியாளாக நேபாளுக்கு சென்றிருந்த ஜிம்மி கார்ட்டர், "காங்கிரசு கட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் அதுவே தொடந்தால் நன்றாக இருக்கும்,கொய்ராலாவிடமே மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும் அதுவே சிறப்பான ஆட்சியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் முதலாளித்துவ ஜன நாயகத்தின் மறுபக்கமான "முதலாளித்துவ சர்வாதிகாரத்தை" அம்மனமாக அவிழ்த்துக் காட்டியுள்ளார்.அதே போல மொத்த நேபாளமுமே அங்கீகரித்து வெற்றியாளர்களாக அறிவித்த மாவோயிஸ்டுகளை இன்று வரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் பட்டியலில் வைத்துள்ளது.

இவையும் இதுபோன்ற இன்னும் பல கண்ணுக்கு தெரியாத சதித்திட்டங்களும் நாளை உலகம் முழுவதும் அம்பலமாகும் பொழுது முதலாளித்துவ ஜனநாயகத்தை நம்பியிருந்த மக்களே அதை சவக்குழிக்குள் தள்ளி மூடுவார்கள். அந்த வர்க்க போரின் உக்கிரமான காட்சிகள் தற்போது நேபாளில் துவங்கிவிட்டது. மாவோயிஸ்டுகள் தலைமையில் அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்காக நேற்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவற்றில் சில

1) அமெரிக்காவின் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து மாவோயிஸ்டுகளின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும்.
2) மிகக் குறுகிய காலத்திற்குள் தோழர். பிரசந்தா தலைமையில் ஒரு இடைக்கால் கூட்டணி அரசு அமைக்கப்படும்.
3) இந்திய - நேபாள எல்லைக்குள் கேட்பாரின்றி நுழையும் வாகனங்களையும், ஆபாச சீரழிவை ஏற்படுத்தும் இந்தித்திரைப்படங்களும் தடை செய்யப்படும்.


மேலும்
விரிவான தீர்மானங்கள் வாசிக்க http://www.hindu.com/2008/04/25/stories/2008042550060100.htm
மக்கள் வாக்களித்து தமது தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள், நேபாள மாவோயிஸ்டுகள் தான் மக்களை வழி நடத்த முற்றிலும் தகுதியுள்ளவர்கள் என்று மக்களே தீர்மானித்த பிறகும் ஏன் இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை? ஏன் கூக்குரலிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதா?
ஏனெனில்
இதுதான் வர்க்கப்போர்,
நிலப்பிரபுத்துவமும், தரகுமுதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஓர் முகாம்.
இழப்பதற்கு ஏதுமற்ற கூலிப்பட்டாளம் ஓர் முகாம்.
ஆம் இது ஏகாதிபத்தியத்திற்க்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான போர்.

வர்க்கம், வர்க்கப்போராட்டம் ஆகியவற்றை மறுப்பவர்களுக்கும் நேபாளம் ஒரு சாட்சி. அதை முடித்து வைக்கத்தான் நேபாள மாவோயிஸ்டுகள் கையை உயர்த்தியுள்ளார்கள், நாமும் அவர்களோடு கரம் உயர்த்துவோம்.
புரட்சி நீடூழி வாழ்க

3 comments:

ஏகலைவன் said...

தோழர்.சூரியன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான நடையில் எழுதிவருகிறீர்கள். பாராட்டுக்கள்.

சி.பி.எம்.மின் இணையக் கோமாளி சந்திப்பு இன்று, "இந்திய மாவோயிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாதை!" என்ற தலைப்பில் தோழர் பிரசாந்தா அவர்களின் நேர்கானலை மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.

நேற்றுவரை நேபாள போலிகம்யூனிஸ்டுகளான UML கட்சிக்கு ஆதரவான நிலையிலிருந்த இந்த இந்திய போலிக் கும்பல் இன்று மாவோயிஸ்டுகளின் புகழ்பாடுவது என்கிற பச்சையான சந்தர்ப்பவாதம் ஒருபுறம் இருக்கட்டும்.

நேபாள மாவோயிசப் பாதையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டியது இந்திய மாவோயிஸ்டுகள் மட்டும்தானா? அதிலிருந்து இந்திய போலி கம்யூனிஸ்டுகள் கற்கவேண்டிய பாடம் எதுவும் இல்லையா?

என்ற கோணத்திலும் தாங்கள் ஒரு தொடர்பதிவு எழுதவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

ஏகலைவன்.

சூரியன் said...

நிச்சயமாக எழுதுவோம் தோழர்.

வெளிச்சம் said...

தோழர்,
இது சந்திப்பிற்கான பிளாக்,
பாருங்கள்.