Sunday, April 13, 2008

இமையத்தின் இருள்களில் பரவும் ஒளி


"இந்த போர் எங்களோடு தொடங்கவுமில்லை,எங்கள் வாழ் நாளோடு முடியப்போவதுமில்லை "

-தோழர் பகத்சிங்

நேபாளத்தில் மாவோயிஸ்ட் தோழர்கள் ஒரு மகத்தான சாதனையை, வரலாற்று முக்கியத்துவமுடைய ஒரு சாதனையை நமது கண் முன்னால் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியத்திற்கும் அதனுடைய கூலிகளுக்குமான சவப்பெட்டியும் அதில் அறைவதற்கான ஆணிகளும் நேபாளத்தில் தான் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இதன் முதல் கட்டமாக நேபாளத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூடியுள்ள மாவோயிஸ்ட் கட்சியுடைய இரண்டாம் நிலைத்தலைவர் தோழர் பாபுராம் பட்டாராய் அவர்களின் நேர்கானல்
இன்று (13/04/08) இந்து நாளித்ழில் வெளியாகியுள்ளது. அதன் மொழி பெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.



கூட்டணி அரசாங்கத்தை அமைப்போம் - பட்டாராய்

நேபாள மாவோயிஸ்டுகளின் இரண்டாம் நிலை தலைவரும் நேபாளத்தின் வருங்கால பிரதமருமாக கருதப்படும் திரு.பாபுராம் பட்டாராய் "அரசியல் நிர்ணயசபை தேர்தலில் தமது கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றாலும் ஒரு கூட்டணி அரசையே அமைக்கவிருப்பதாக கூறியுள்ளார்."

"நடக்கக்கூடிய இந்த மாற்றத்தில் அரசியல் பொதுகருத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும்.இதன் முடிவில் கூட்டணி அரசு அமைந்தாலும் வருங்காலத்தில் மாவோயிஸ்டுகளே அதற்கு தலைமை தாங்குவார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம், அதுவே மக்களின் இன்றியமையாத் தேவையாகவும் உள்ளது" என்று இந்து நாளிதழுக்கு கொடுத்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்

அதிபர் ஆட்சி வடிவத்தை மாவோயிஸ்டுகள் தங்கள் தேர்தல் அறிகையில் வலியுறுத்தியுள்ளனர் இருப்பினும் திரு.பட்டாராய், "தற்போது இடைக்கால அரசியல் அமைப்பில் பங்கேற்றாலும், வரக்கூடிய புதிய அரசியல் அமைப்பின் மாறத்தின் ஊடாக தற்போது நிலவக்கூடிய பிரதமர் ஆட்சிமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவோம்" என்று கூறியுள்ளார்.

திரு.பட்டாராய் தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில் " இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார் .
"மக்கள் நேபாளத்தில் ஒரு உண்மையான மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் ஆனால் பழைய கட்சிகளோ தற்போது இருக்கக்கூடிய நிலைமையையே நீட்டிக்க விரும்பினர், எனவேதான் மக்கள் இந்த மாற்றத்தை நிகழ்த்த எங்களை தேர்த்தெடுத்துள்ளனர்." மேலும் அவர், " மாவோயிஸ்டுகளால் மட்டும் தான் நீடித்த அமைதியையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியுமென்று மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் அவர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்" என்றும் கூறியுள்ளார்.

தமது கட்சியின் வருங்கால அரசியல் நோக்கத்தை விளக்கும் பொழுது அவர் "நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதும், பிராந்திய சுயாட்சியுடன் கூடிய ஒரு ஒருங்கிணைந்த ஜனநாயகக் குடியரசை நிறுவுவதே எங்களின் முக்கியமான அரசியல் நோக்கமாகும்."

பொருளாதாரத்தைப் பற்றி கூறும் பொழுது திரு.பட்டாராய் " நாங்கள் ஊழல், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதும், தொழில்களை தேசியமயமாக்குதலுடன் கூடிய விரைவான பொருளாதார வளர்சியை கொண்டுவர பாடுபடுவோம்". "எங்கள் கட்சி ஜனநாயகத்திற்குட்பட்டு இயங்கும் அதேபோல எமது ஆட்சியின் கீழ் எவரும் தனிமனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் நிறுவுவதை மறுத்துவிட முடியாது ஆனாலும் எங்கள் கட்சியின் ஆட்சி உண்மையான ஜனநாயகமாக இருக்கும், பெயரளவிலான ஜனநாயகமாக இராது.

அவர் மேலும் வாதிடுகிறார்:
நாடாளுமன்ற ஜனநாயகமென்பது நேபாளத்திற்கு எக்காலத்திலும் பொருந்தாது இங்கு வேறு வகையிலான ஒரு முழுமையான ஜனநாயகம் அவசியமாக உள்ளது. அவர் தமது கட்சியின் வெளியுறவு கொள்கைகள் பற்றி கூறும் பொழுது நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கைகளையே விரும்புகிறோம், குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவுடன்.

நேபாளம்: இமயத்தின் மீது சிவப்பு ...

5 comments:

சூரியன் said...

test

Anonymous said...

தோழர்,
மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது,
தலைப்பில் "இமையத்தின்" என்றிருக்க வேண்டும் மாறாக
இமையதின் என்றுள்ளது,
பாருங்கள்.

Anonymous said...

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கான சவப்பெட்டி அமெரிக்காவில் தயாராகிகிக்கொண்டுள்ளது ரொம்ப பூரிச்சு போகாதிங்கடா.

சூரியன் said...

அனானி
அமெரிக்க மாமா தான் உனக்கு ஆபத்பாந்தவனான எஜமான் என்பதையும் நீயெல்லாம் அவனுக்கு கைக்கூலி தான் என்பதையும் உன்னுடைய இந்த பின்னூட்டத்தை விட நான் அழகாக சொல்லி விட முடியாது,எமது கருத்தை மேலும் உறுதிப்படுத்தியதற்கு அனானியே உனக்கு நன்றி.

சூரியன் said...

பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி தோழர் மாற்றி விட்டேன்.