Tuesday, March 2, 2010

ஆர் எஸ் எஸ் அங்கிளும், காம லீலை நித்தியாவும்!!

சுவாமி நித்தியானந்தா நடிகைகளுடன் காம லீலைகளில் ஈடுபட்டு ஆன்மீகச் சேவை செய்தது வீடியோ ஆதாரங்களாக நேற்று வெளிவந்து சந்தையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.எப்போது ஆதாரம் வெளி வரும் என்று காத்திருந்தது போல ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நித்தியாவின் ஆசிரமத்தை தாக்கி, அவனது படங்களை கிழித்து, அவனை கைது செய்ய வேண்டும் என்றும், ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்து மதத்துக்கு பெருத்த அவமானத்தை அவன் உருவாக்கி விட்டான் என்றும், இந்துக்களிடம் தான் குற்றமற்றவன் என்று நிரூபித்த பின்புதான் அவன் வெளியே நடமாட வேண்டும் என்றும் கூறி குரங்குகள் போல குதிக்கின்றனர்.

சாமியார்கள் கபட வேடாதாரிகள் என்பது காலம் காலமாக அம்பலமாகி வருவதும், இவையெல்லாவற்றையும் மீறி நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பல்வேறு மன உளைச்சல்களிலிருந்தும், மன நோய்களிலிருந்தும் விடுபட உதவுவதாக எண்ணிக் கொண்டு மக்கள் இந்த போதை வஸ்து வியாபாரிகளை நோக்கி படை எடுப்பதும் நடந்து வருகின்ற ஒன்றுதான். அந்த வகையில் நித்தியா அம்பலமானது அவனது ரசிக மஹாஜனங்களிடம் அல்லது ஆன்மீக கஸ்டமர்களிடம் ஏற்படுத்த இருக்கும் ஆன்மீக அதிர்ச்சி ஒரு நல்ல விளைவை நோக்கிய இன்னுமொரு சிறிய முன்னேற்றம் என்று நாம் சந்தோசப்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க. இவனைப் போல நமது சாமியார் இன்னும் அம்பலமாகவில்லை என்று சத்குரு ஜக்கி போன்றவர்களின் ஆன்மிக கஸ்டமர்கள் நிம்மதியில் இருப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால், அவனை வைத்து ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் நாடகம் அவர்களின் பார்ப்பனிய பாசிச தத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதற்கு முன்பு இதைவிட கேவலமான முறையில் சங்கராச்சாரி என்ற கஞ்சா காமகோடி பீடையாதிபதி, கொலை, ஆள்கடத்தல், புளூபிலிம், விபச்சாரம், பெண்களை பலாத்காரம் செய்தல், முறைக் கேடான உறவுகள் என்று சகலவிதமான அசிங்கங்களிலும் சிக்கி அம்பலமானான். அன்றைக்கு அவனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி கோசமிட்டவர்கள் இதே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான். இதற்காக சென்னை நீதிமன்றத்தில் ம க இ க அமைப்பினரிடம் அடி வாங்கி ஓடியவர்கள்தான் அவர்கள். சங்கராச்சாரி என்ற பார்ப்பனன் காம லீலைகளின் ஈடுபட்டால் அது இந்து மதத்துக்கு அவமானம் இல்லையாம். அவன் குற்றமற்றவன் என்று நீருபிக்க வேண்டிய அவசியமில்லையாம். அவன் மீண்டும் அனைத்துலக குருவாக வலம் வர வேண்டுமாம். அவ்வாறு செய்யாவிடில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமானதாம், அவமானப்படுத்துவதாகிவிடுமாம். ஆனால் நித்தியாவின் விசயத்தில் தலைகீழ். ஏனேனில் அவன் பார்ப்பான் கிடையாது.இதுதான் இந்துக்களின் நம்பிக்கை, ஆன்மீகம் என்று ஆர் எஸ் எஸ் பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துகிறது.

நமக்கு இந்த பேதமெல்லாம் கிடையாது. எவனொருவன் பார்ப்பனியத்துக்கு சேவை செய்கிறானோ எவனொருவன் மக்கள் விரோதியோ அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது அனுகுமுறை.ஆனால், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளோ, தேவநாதன் என்ற பார்ப்பனன் கோயிலுக்கு வருகின்ற பெண்களை மயக்கி கோயில் கருவறையிலேயே ஜெகஜ்ஜால காம லீலைகள் அரங்கேற்றியது அம்பலமான பொழுது அதனை இந்துத்துவ பயங்கரவாதிகள் கண்டுகொள்ளவே இல்லை. சிதம்பரம் கோயிலில் ஆண்டாண்டு காலமாக விபச்சாரமும், கொலைகளும், திருட்டும் கோயில் தீட்சிதர்களாலேயே அரங்கேறி வந்தது பலமுறை அம்பலமான பொழுதெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகள் அமைதி காத்தார்கள்.ஆனால், தமிழில் பாட உரிமை கோரி போராடிய பொழுது மட்டுமே எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள்.

ஆக, விபச்சாரமும், பாலியல் வக்கிரங்களும், திருட்டும், கொலையும் பார்ப்பனனுக்கு மட்டுமே உரியது என்ற இந்து மதச் ஆசாரங்களின்படிதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். எனவேதான் சூத்திர சாமியார்கள் இதே வேலைகளைச் செய்தால் மட்டுமே இந்து மதத்துக்கு அவமானம் என்று கதறுகிறார்கள். சூத்திர சாமியார் ஆகட்டும் அல்லது பார்ப்பனச் சாமியார் ஆகட்டும் அல்லது இவர்களுக்கு இடையே பேதம் பார்த்து அரசியல் செய்யும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளாக அணி திரண்டுள்ள சூத்திர, பார்ப்பன அடியாட்களாகட்டும் இவர்கள் அனைவருமே ஒழித்துக் கட்டப் பட வேண்டிய கிருமிகள். இவர்களை வீதிகளின் இறங்கி நையப் புடைத்தெடுக்க சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டியுள்ளது.

சூரியன்

பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!">பரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!">புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் மூன்று : கடவுள் கைது ! பக்தன் விடுதலை !!

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !">சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

Thursday, March 19, 2009

ஒரிஸ்ஸாவில் ஆர் எஸ் எஸ் சொறிநாய் சுட்டுக் கொல்லப்பட்டது!!!

ஒரிஸ்ஸா-ஜாமினில் வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சுட்டுக்கொலை!
வியாழக்கிழமை, மார்ச் 19, 2009, 13:23 [IST]

புவனேஸ்வர்: கடந்த ஆண்டு ஒரிஸ்ஸாவில் நடந்த மதக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் ஜாமீனில் வெளி வந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரிஸ்ஸாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த லட்சுமணானந்தா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு நக்சைலட் இயக்கம் ஒன்று பொறுப்பேற்று கொண்டது.

இதையடுத்து கிருஸ்துவர்கள் மீது இந்துத்துவா அமைப்புகள் கொலை வெறித் தாக்குதல் நடத்தின. பல சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. கன்னியஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்டார்.

இந்தக் கலவரங்கள் தொடர்பாக பிரபத் பனிகிரகி என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந நிலையில் அவர் கடந்த 14ம் தேதி பாலிகுடா சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் புல்பானி நகரிலிருந்து 145 கிமீ தூரத்தில் உள்ள ருடிகுமா என்ற கிராமத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் அங்கு வந்த ஆயுதம் ஏந்திய 15 பேர் கொண்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவரை சுட்டு கொன்றனர். பின்னர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கோடாகடா மற்றும் ருடிகுமா செல்லும் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போக்குவரத்தை தடை செய்துவிட்டனர். இந்த தடைகளை அகற்றிவிட்டு போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்துக்கு செல்வதற்கு வெகு நேரமாகிவிட்டது.

ஜாமீனில் வந்த பனிகிரகி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: தாட்ஸ் தமிழ்

Monday, March 16, 2009

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்!!!

லையுலகில் திடீரென்று 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற கோட்பாட்டின் மேன்மை குறித்து பரப்புரை நடந்தேறி வருகிறது. இன்னிலையில் இந்த கோட்பாட்டின் உண்மையான பொருள் என்னவென்று கீழே சொல்லப்பட்டுள்ளது.

'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்பது சாதிய தத்துவமாகும். நால் வர்ணங்களையும் அதற்குரிய கடமைகளையும் படைத்தவன் நானே என்று சொன்னான் கிருஷ்ணன். அந்த கடமைகளை பலன்களை எதிர்பாராமல் செய்ய வேண்டும் என்று சொன்னதைதான் இப்பொழுது ஏதோ பெரிய சூத்திரம் போல பிதற்றுகிறார்கள். இதே விசயத்தைத்தான் நரமாமிச நரேந்திர மோடி குஜராத்தில் தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அங்குள்ள மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்வது தவம் என்று குறிப்பிட்டு தனது புத்தகத்தில் எழுதியுள்ளான் மோடி.

கிருஷ்ணன் மேலும் ஒரு படி சென்று இந்த தர்மம் எப்பொழுதெல்லாம் மீறப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவதரித்து மீண்டும் (சாதிய) தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று சொல்லியுள்ளான்.

கீதாவின் சாரம் எனப்படும் இந்த பிற்போக்கு தத்துவம், இந்திய சமுகத்தை ஆயிரம் வருட இருட்டில் தள்ளி இந்தியாவின் வளர்ச்சியையே முடக்கி போட்ட ஒரு நாசகர தத்துவமாகும். வரலாற்றுப் பூர்வமாக இந்த தத்துவத்தின் கதை இது என்றால், யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.

இந்த விவகாரத்தில் விவாதம் செய்ய வருபவர்கள் முதலில் 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' எனும் மக்கள் விரோத குப்பைத் தத்துவம் ஒரு சாதிய தத்துவம் என்பதை விவாதம் செய்ய வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக்குகிறேன். இதனை மறுத்து பேசிவிட்டு பிறகு அதன் பொது அர்த்தத்தின் மீது வாதம் செய்வதே நேர்மையானது ஆகும்.

சாதிய சமுகமாக இந்தியாவை நாசம் செய்த வர்ணாஸ்ரம் தர்மத்தையும், அதன் தத்துவ புத்தகமான கீதையையும், அதன் கோட்பாடான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற முழக்கத்தையும், அதை எழுதிய அயோக்கியனான கிருஷ்ணன் என்ற பொம்பளை பொறுக்கியையும் பொசுக்கி எரிப்பதுதான் நமது முன்னேற்றத்திற்காக நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கும்.

சூரியன்

Wednesday, February 4, 2009

திமுக-வை RSS கைப்பற்றியது!!

ந்த ப்ளக்ஸ் போர்டை பார்த்தாலே கண்கள் எல்லாம் பரவசமாகின. ஒரு பக்கத்தில் RSS அன்னை சிங்கத்தின் மீது சாய்ந்து நின்று கொண்டு நம்மை பார்க்க, இன்னொரு பக்கத்தில் உடன்பிறப்புகளின் மூத்த அண்ணன் கலைஞர் கருணாநிதியும் அவரது தவப் புதல்வர், இன்றைய ஊராட்சியான (நாளைய தமிழகமாம்) ஸ்டாலின் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். என்னயிது கலப்பு திருமணம் போல இருக்கு என்று பார்த்தால் பெருங்குடியில் இருக்கும் பாரதமாதா இளைஞர் மன்றம் தனது 13வது ஆண்டு துவக்க விழாவுக்கு வைத்த விளம்பர தட்டி இது. இந்துத்துவ இளைஞர் மன்றத்தை உடன்பிறப்புகள் கைப்பற்ற, கலைஞரையோ பாரத மாதாவே (சோனியாவும், பாரத மாதாவும் ஒன்னுதான்) கைப்பற்றியாகிவிட்டது.



கருணாநிதி RSSன் கிராம பூசாரி சங்கத்தை திறந்து வைக்கும் போது அவரது உடன்பிறப்புகள் ஆப்டர் ஆல் ஒரு பாரத மாதா படத்துடன் போஸ் கொடுக்கக் கூடாதா என்ன? என்ன பாவம் அந்த சிங்கம்தான் 'சிங்கிளா' இந்த 'கூட்டத்து'க்கிட்ட மாட்டிக்கிட்டு பேஸ்து அடிச்சிப் போய் நிக்குது. ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் சேர்த்து தலைவராக அறிவிக்கப்பட்டவர் இன்று விபிடனனாக துரோகம் இழைத்து வரும் பொழுது அவரது அல்லக்கைகள் இதனை செய்துள்ளது திமுகவின் எதிர்கால வளர்ச்சியை முன்னறிந்ததொரு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. இன்னமும் கருணாநிதியின் துரோகத்தை சமரசம், சமரசம் என்று சாமரம் வீசும் அதிர்ஷ்டம் (கெட்ட) பார்வையுடயைவர்களுக்கு புரிந்தால் சரிதான்.

சூரியன்

Tuesday, December 30, 2008

எங்க ஏரியா உள்ள வராதே! வொவ் வொவ்... - குரைக்கும் CPM சொறிநாய்!!

குலைக்கிற சொறிநாய் கடிக்காது உதை வாங்குற சொறிநாய் குலைக்காது - சொறிநாயை ஒழிப்போர் சங்கம்

தலைப்பில் உள்ள பாட்டு அனைவருக்கும் அறிமுகமானதே. 'புதுபேட்டை' படத்தில் ரவுடிகள் என்ற சொறிநாய்களுக்கான பாடலாக அது வரும். தற்போது CPM அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிக்கும் அந்த பாடல் பொருத்தமாக உள்ளது. சில நாட்கள் முன்பு CPM சொறிநாய்கள் பம்மி பதுங்கி ஓடிய சம்பவம் குறித்தே இந்த பதிவு.

ஏற்கனவே பல்லாவரத்தில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன புஜதொமு தோழர்களிடம் வம்பு செய்து விழி பிதுங்கி போயுள்ளது CPM சொறிநாய். (கிளைக் கதை: பல்லாவரம் பிரச்சினையில் புஜதொமு கொடுத்துள்ள FIR பதிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. அது பதிவு செய்யப்பட்டால் ரவுடித்தனம் செய்த CPM சொறிநாய்களின் உத்தியோகத்துக்கு ஆப்பு ஆகிவிடும். இப்போது தங்களது நிரந்தர கூட்டணியில் உள்ள போலீசை வைத்து கெஞ்சியும், மிரட்டியும் வருகிறார்கள். போலீசுக்கும் ரவுடிக்கும் இருக்கும் கூட்டணியில் இது ஒரு வகை).

இந்நிலையில், ஆவடியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடிற்கு பிரச்சாரம் செய்யப் போன இளம் தோழர்களிடம் இதே போல ரவுடித்தனம் செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். "வேற ஏரியாவுல இருந்து இங்க வந்து ஏண்டா பிரச்சாரம் செய்கிறீர்கள்" என்று வம்பு செய்துள்ளனர் CPM சொறிநாய்கள். எங்க ஏரியா உள்ள வராதே என்று புதுப்பேட்டை சொறிநாய்கள் ஸ்டைலில் கூவியவர்களிடம் இருந்து ஒதுங்கி வந்துள்ளனர் தோழர்கள். சிறிது நேரத்திற்கு பிறகு இந்த இளம் தோழர்கள் ஒரு மூத்த தோழர் துணையுடன் அங்கு மீண்டும் பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார்.

மீண்டும் வந்த CPM சொறிநாய்களிடம் மூத்த தோழர் நடத்திய உரையாடல் பின்வருமாறு போனது:

புஜதொமு தோழர்: ஏரியா விட்டு ஏரியா வந்துதாண்டா பிரச்சாரம் செய்வோம் உன்னால என்ன புடுங்க முடியுமோ, புடுங்கிக் கோடா.

CPM சொறிநாய்கள்: இல்ல தோழர், அது... நாங்க சும்மா விசாரிச்சோம் அவ்வளவுதான்....

மூத்த தோழர் குறித்து அறிந்திருந்த CPM சொறிநாய்கள், இப்படியாக பம்மி, பதுங்கி, குலைந்து, தமது வாலை ஆட்ட வழியின்றி பின்னால் சொருகிக் கொண்டு ஓடியுள்ளனர். அதிமுக, திமுக, பாமக கட்சிகளிடம் இருக்கும் நாகரிகம் கூட CPM இடம் இல்லை என்பதும். இந்தியாவிலேயே ஆகக் கேவலமாக சீரழிந்த கட்சியாக, சொறிநாய்களின் தலைமை சக்தியாக CPM இருப்பதும் கடந்த சில வருடங்களில் தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று. ஏரியா பிரித்து ரவுடியிசம் செய்யும் கட்சியாக அது வளர்ந்துள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குறுக்கு வழியில் அடைவோம் என்று சொன்னவர்கள் இப்போது சொறிநாய்களின் மொள்ளமாறித்தனத்தையே அடைந்துள்ளனர்.

கலகம் என்ற தோழரின் கவுஜ(சில மாற்றங்களுடன்):

சிவப்பு சாயம்
வெளுத்து போச்சு டிங் டிங் டிங்

பன்னி வேசம்
கலஞ்சு போச்சு டிங்டிங்டிங்

தீக்கதிரும்
குப்பையாச்சு டிங்டிங்டிங்

போலி விடுதலைக்கு
பைத்தியம் முத்தி டிங்டிங்டிங்

CPM சொறிநாயின்னு தெரிஞ்சு
போச்சி வொவ் வொவ் வொவ்...

சூரியன்

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!
அமர்நாத் - சோம்நாத்
ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!
சி.பி.எம். அம்பிகளின் தீக்கதிரும், பத்திரிக்கா தர்...
”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியை...

Friday, December 19, 2008

தமிழர்களின் உரிமைகளை மதித்த கர்நாடக அமைச்சர் நஞ்சே கவுடா மரணமடைந்து விட்டார்!

கேனாக்கல் பிரச்சினையை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் கன்னட இனவெறி கிளப்பி அரசியல் ஆதாயம் தேடி கொண்டான் RSS கும்பலின் தேர்தல் கட்சியான பாஜகவின் எடியூரப்பா என்ற வக்கிர கோமாளி. இந்த சமயத்தில் ஒகேனாக்கலில் தமிழகத்தின் உரிமையை துணிச்சலாக அங்கீகரித்து பேசியவர்தான் இந்த நஞ்சே கௌடா. அந்த சமயத்தில் வெகு தெளிவாக தமிழகத்தின் உரிமைகளை குறிப்பிட்டதுடன், ஒகேனாக்கல் குடிநீர் திட்டத்தை கர்நாடகா தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்திற்க்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சூரியன்

Tuesday, December 16, 2008

நேற்று அண்டார்டிகாவில் பயங்கரவாதிகள் நடத்திய அதி பயங்கர தாக்குதல்!!

அண்டார்டிகா, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் பயங்கரவாதிகள் இதுவரை நடத்திய அதி பயங்கர தாக்குதல்கள் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆளே இல்லாத நாட்டுல யாருக்குடா குண்டு வைக்கிறாய்ங்க என்று வியக்கும் நல்லுள்ளம் கொண்டோர்களுக்கான விளக்கம் வருமாறு.

நாசா என்கிற அமெரிக்க ஆய்வு கூடம் நடத்திய ஆய்வில் இதுவரை அண்டார்டிக, அலாஸ்கா, கிரீன்லாந்து பகுதிகளில் 2003லிருந்து 2 டிரில்லியன் டன் ஐஸ் கட்டி உருகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை குலோபல் வார்மிங் என்று சொல்கிறார்கள். நமக்கென்னவோ குலோபல் வார்னிங் என்றே காதில் விழுகிறது. 2 டிரில்லியன் டன் என்பது 2 லட்சம் கோடியே ஆயிரம் கிலோ பனிக்கட்டி உருகியுள்ளது. இப்படி நடைபெறும் பணிக்கட்டி உருகல் குறித்து பல வருடங்களாகவே மிக கடுமையான எச்சரிக்கைகளை ஆய்வாளர்கள் அறிவித்து வந்துள்ளனர். இது குறித்து முன்னாள் அமெரிக்க குடியரசு பதவி போட்டியாளர் அல் கோர் எடுத்த ஆவணப் படமான 'குலோபல் வார்மிங் - தி இன்கண்வீனியண்ட் ட்ரூத்' பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. (The Hindu - Dec 17 2008 - Newscape - 2 Trillion tonnes of ice have melted since 2003: NASA) (Ice melting across globe at accelerating rate, NASA says - CNN)

குலோபல் வார்மிங் பிரச்சினையால்தான் மாலத்தீவு மூழ்கும் அபாயம் ஏற்பட்டு அந்த நாட்டு பிரஜைகள் உலகில் எங்கு வேண்டுமானலும் குடியேறும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் 40 வருடம் கழித்து உருகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பனிப்பாறை ஒன்று இந்த வருட ஆரம்பத்திலேயே உருகி பீதியை கிளப்பியிருந்தது இங்கு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது.

மனித குலத்தையே பூண்டோடு அழிக்கும் திட்டத்துடன் இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை சர்வதேச முதலாளிகள் வரைமுறையற்ற தொழில்சாலை உற்பத்தி, லாப வெறி உள்ளிட்டவைகளின் மூலம் நிறைவேற்றி வருகிறார்கள். இயற்கை வளங்களை நாசப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உற்பத்தியே இந்த பயங்கரவாதத்திற்க்கு காரணம். இதே பயங்கரவாதிகள்தான் தமது பயங்கரவாத செயல்களின் மூலம் ஈட்டிய பணத்தை பங்கு சந்தையில் வைத்து சூதாடி ஒட்டு மொத்த உலகையும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள பயங்கரவாத செயலுக்கும் காரணாமனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வதேச பயங்கரவாதிகளை ஒழிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரச் சொல்லி எல்லாம் வல்ல அத்வானி அவர்களிடம் கோரிக்கை வைக்கும் யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டது. பிறகு அவரும் அந்த கும்பலில் ஒருவர் என்பது தெரியவந்தவுடன் அந்த யோசனை கிடப்பில் போடப்பட்டது.

இப்பொழுது இந்த பயங்கரவாத அபாயத்திலிருந்து உலகை காப்பாற்ற என்ன செய்யலாம் என்று மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க.

சூரியன்

Climate experts sound grim warning
Waking up to an inconvenient truth